விளையாட்டு

"இந்தியா - இலங்கை" - இன்று மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி..!

Malaimurasu Seithigal TV

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி, திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரை, ஏற்கனவே 2-க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்திய அணி வென்றுள்ளது. இதனால், இந்த போட்டியில் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோருக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது. அதே சமயம், கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற இலங்கை அணி முயற்சிக்கும். இதனால் இந்த போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.