விளையாட்டு

டெண்டுல்கரின் கிரிக்கெட் வாழ்க்கையில் நிறைவேறாத 2 ஆசைகள்... வருத்தம் தெரிவித்த சச்சின்

Malaimurasu Seithigal TV

கிரிக்கெட் உலகில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் தமது கிரிக்கெட் வாழ்க்கையில் இரண்டு வருத்தங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். 

டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவரும், சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்த ஒரே வீரருமான சச்சின் தெண்டுல்கர், சர்வதேச கிரிக்கெட்டில் கால்பதிப்பதற்கு 2 ஆண்டுக்கு முன்பாக, அவரது இளம் வயது பேட்டிங் ஹீரோவான சுனில் கவாஸ்கர் ஓய்வு பெற்று விட்டார். இதனால், கவாஸ்கருடன் இணைந்து விளையாட முடியாத வருத்தம் இருப்பதாக சச்சின் தெரிவித்துள்ளார். 

அதேபோல், தனது சிறுவயது நாயகனான வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் விவியன் ரிச்சர்ட்சுக்கு எதிராக விளையாட வேண்டும் என்ற ஆசையும் நிறைவேறாமல் போனதாக அவர் தெரிவித்துள்ளார்.