விளையாட்டு

இந்தியாவை வென்றாலும் டி20 உலக கோப்பை எளிதல்ல -  பாக் கேப்டன்

இந்தியாவை வென்றதால் மட்டுமே டி20 உலக கோப்பை என்பது எளிதாக அமைந்து விடாது என, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் ஆசம் கூறியுள்ளார்.

Malaimurasu Seithigal TV

இந்தியாவை வென்றதால் மட்டுமே டி20 உலக கோப்பை என்பது எளிதாக அமைந்து விடாது என, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் ஆசம் கூறியுள்ளார்.

துபாயில் நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பை சூப்பர்-12 சுற்று போட்டியில், பாகிஸ்தான் அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்தது. இதனையடுத்து, பேட்டி அளித்துள்ள பாபர் ஆசம், இந்தியாவை தோற்கடித்து விட்டதால் மட்டுமே டி20 உலக கோப்பை என்பது எளிதாக அமைந்து விடாது என தெரிவித்துள்ளார்.  தாங்கள் இந்த நம்பிக்கையை கைகொள்வோம் என்றும்,  ஆனால், இதனை ஒரு போட்டியாக மட்டுமே கவனத்தில் கொள்வோம் எனவும் குறிப்பிட்டுள்ள அவர், இந்த தொடரில் செல்ல நீண்ட தொலைவு உள்ளதாகவும், தங்களுடைய மனதில் இருந்து வரலாற்றை வெளியேற்றியுள்ளதாகவும் கூறியுள்ளார்.