விளையாட்டு

உலக கோப்பை கிரிக்கெட்: சிறப்பு ரயில் இயக்கம்..!

Malaimurasu Seithigal TV

சென்னையில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் நாட்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 ஐசிசி நடத்தும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியா- ஆஸ்திரேலியா இடையே உலகக்கோப்பை போட்டி நடைபெற உள்ளது.

இதனிடையே, உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் நாட்களில் பறக்கும் வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

அதில் வருகிற 8, 13, 18, 23, 27 ஆகிய 5 நாட்கள் சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.