விளையாட்டு

இளம் மோட்டார் சைக்கிள் வீரர் விபத்தில் பலி

Malaimurasu Seithigal TV

மோட்டார் சைக்கிள் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்தில் 19 வயது இளம் மோட்டார் சைக்கிள் வீரர் உயிரிழந்த சம்பவம் விளையாட்டு உலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இத்தாலி கிராண்ட்பிரிக்ஸ் மோட்டார் சைக்கிள் பந்தயத்திற்கான தகுதிச்சுற்றுப் போட்டி இத்தாலியில் உள்ள முகெல்லோ ஓடுதளத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஸ்விட்சர்லாந்தின் ஜாசன் துபாஸ்குயரின் மோட்டார் சைக்கிள் கீழே சரிந்த போது பிந்தொடர்ந்து வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் அவர் மீது பயங்கரமாக மோதியது.

இதில் பலத்த காயமடைந்த ஜாசன் துபாஸ்குயர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், இந்த போட்டியில் வெற்றிபெற்ற பிரான்ஸின் ஃபேபியோ குவாட்டராரோ, விபத்தில் சிக்கீய ஜாசனை கவுரவிக்கும் விதமாக தனது பைக்கின் மீது ஸ்விட்சர்லாந்து கொடியை வைத்து வணங்கினார்.