நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின, டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பௌலிங்கை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. தோனி காயம் காரணமாக விலகியுள்ள சூழலில், அதிரடி வீரர் பிரேவிஸும் காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால், பவர் பிளேவில் சராசரியாக 29 ரன்களைதான் அடிக்க முடிந்தது. 19.4 ஓவரில் மொத்த விக்கெட்டையும் இழந்து வெறும் 127 ரன்கள் மட்டுமே சென்னை அணி எடுத்தது. 128 எடுத்தால் வெற்றி என்ற ஈஸியான இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி இரண்டாவதாக பேட்டிங் செய்தது.
ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில், சிஎஸ்கே வீரர்கள் பேட்டிங்கில் தொடர்ச்சியாக சொதப்பி அடுத்தடுத்து அவுட் ஆகி ஷாக் கொடுத்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் பௌலர்கள் வீசிய சொதப்பல் பந்துகளுக்கு கூட சிஎஸ்கே பேட்டர்கள் விக்கெட்டை பறிகொடுத்தது தான் சோகத்தின் உச்சம்.
128 யை இலக்காக கொண்டு இறங்கிய ராஜஸ்தான் அணி வீரர்கள் முதல் ஓவரில் இருந்தே அதிரடி காட்டத் தொடங்கினர். சென்னை அணி பௌலர்களை பந்தாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 36 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூரியவன்ஷி தொடர்ந்து அதிரடி கட்டிய நிலையில், இளம் வீரரான வைபவ் சூரியவன்ஷி, சென்னை அணி பவுலர்களை தனது ஆட்டத்தால் மிரளாவிட்டார். வெறும் 15 பந்துகளில் அரை சதத்தை கைப்பற்றினர் சூரியவன்ஷி. 17 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து சென்னைக்கு பயத்தை கட்டி வெளியேறினார்.
ராஜஸ்தான் அணி 11 ஓவர்களில் ஆட்டத்தை முடிக்கும் என்ற நிலையில், வெறும் 12.1 ஓவர்களில் 128 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 20 ஓவர்கள் கூட சிஎஸ்கே முழுமையாக பேட்டிங் செய்யவில்லை. 19.4 ஓவர்களில் 127 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.
இந்த மகத்தான வெற்றி, ராஜஸ்தான் ராயல்ஸின் வலுவான தொடக்கத்தையும் இளம் வீரர் சூர்யவன்ஷியின் வளர்ச்சியையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, மேலும் சிஎஸ்கே தனது பேட்டிங் வரிசை குறித்து யோசிக்க வேண்டிய நிலையும் உள்ளது. அதே நேரத்தில் சாம்சன் தாக்கத்தை ஏற்படுத்தத் திணறினார். அது தடுத்து இறங்கிய வீரர்களும் சொல்லும் படி ஒரு முயற்சியையும் எடுக்கவில்லை என்பதே சென்னை அணியின் படுதோல்விக்கு காரணம்
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.