மணிப்பூர் விவகாரம்: அடையாளம் காணப்பட்ட 14... விரைவில் கைது!! 

மணிப்பூர் விவகாரம்: அடையாளம் காணப்பட்ட 14... விரைவில் கைது!! 

Published on

மணிப்பூர் வன்முறை சம்பவத்தில் தொடா்புடைய மேலும் 14 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறையினா் தொிவித்துள்ளனா். 

மணிப்பூரில் பழங்குடியின பெண்களுக்கு நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் இதுபோன்ற பல்வேறு வன்கொடுமைச் சம்பவங்கள் மணிப்பூரில் அரங்கேறியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் எதிா்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினா் கடும் எதிா்ப்பு தொிவித்து வருகின்றனா். இச்சம்வம் குறித்து வழக்குப்பதிவு செய்து இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். 

இந்நிலையில், வன்முறை சம்பவத்தில் தொடா்புடைய மேலும் 14 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது விரைவில் கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மணிப்பூர் போலீசாா் தொிவித்துள்ளனா். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com