ஆட்டோ ஏறுவதில் தகராறு ;பயணியின் சுண்டு விரலை கடித்து துப்பிய ஆட்டோ ஓட்டுநர்!

ஆட்டோ ஏறுவதில் தகராறு ;பயணியின் சுண்டு விரலை கடித்து துப்பிய ஆட்டோ ஓட்டுநர்!

Published on

ஆட்டோ ஏறுவதில் ஏற்பட்ட தகராறில் பயணியின் சுண்டு விரலை கடித்து துப்பிய ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை திருவான்மியூரை அடுத்த வெட்டுவாங்கேனி பகுதியை சேர்ந்தவர் ராமு (52), ஆக்டிங் டிரைவராக பணிபுரிந்து வரும் இவர், வீட்டிற்கு செல்ல திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் ஆட்டோவில் ஏறி உள்ளார். 

அப்போது ஆட்டோவின் பின்புறம் உள்ள கம்பியில் கால் வைத்ததால் ஆட்டோ ஓட்டுனர் சந்தானம் ராமுவை தகாத வார்த்தைகளால் திட்டிய நிலையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆட்டோ ஓட்டுநர் சந்தானம் ராமுவின் வலது கை சுண்டு விரலை கடித்து துப்பி காயம் ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

இந்நிலையில் உடனடியாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ராமுவை ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்நிலையில் அவரை சோதித்த கை சுண்டு விரலின் பாதியை ஒட்ட முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்,

ராமு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திருவான்மியூர் போலீசார் ஆட்டோ ஓட்டுநர் சந்தானத்தை கைது செய்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com