நவம்பர் 5; ஞாயிற்றுக்கிழமையில் நியாய விலைக் கடைகள் இயங்கும்

நவம்பர்  5; ஞாயிற்றுக்கிழமையில்  நியாய விலைக் கடைகள் இயங்கும்

தமிழ்நாட்டில் வருகிற 5-ம் தேதி நியாய விலைக் கடைகள் இயங்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

இந்த மாதம் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் வரும் ஐந்தாம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நியாய விலை கடைகளுக்கு விடுமுறை இல்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அனைத்து நாட்களிலும் அனைத்து அட்டைதாரர்களுக்கும் அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும் என ரேஷன் கடை பணியாளர்களுக்கு உணவுத்துறை அறிவித்துள்ளது. 

தீபாவளி பண்டிகைக்கு பல்வேறு குடும்பத்தினர் முன்கூட்டியே அரிசி சர்க்கரை பருப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்குவார்கள் என்பதால் இருப்பு சரியான முறையில் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com