முதலீடு என்பது, எவ்வளவு இளம் வயதில் துவங்கிறீர்கள் என்பதை பொறுத்து உங்களுடைய ஓய்வு காலத்தில் அந்த அளவிற்கு பெரிய லாபம் கிடைக்கும். இன்றைய காலகட்டத்தில், இளைஞர்கள் பலரும் தங்களுடைய ஓய்வு காலத்தை சிறப்பாக செயல்படுத்த இப்போதே ஆயத்தமாகின்றனர். அரசு வேலையில் இல்லை என்றாலும், 58 வயதை கடந்து எப்படி தங்கள் ஓய்வு காலத்தை நிம்மதியாக கழிக்க வேண்டும் என்பதை இப்போதே திட்டமிடுகின்றனர்.
மாதந்தோறும் கிடைக்கும் சிறு சிறு தொகையை கூட சேமித்து, அதை SIP போன்ற சிறப்பான திட்டங்களில் முதலீடு செய்து பெரும் லாபத்தை ஈட்டலாம். ஷேர் மார்க்கெட் என்பது ரிஸ்க் அதிகம் உள்ள ஒரு இடம் தான் என்றாலும், துணிந்து செயல்படுபவர்களுக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்கிறது.
SIP என்ற சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் பற்றிய பல தகவல்களை தொடர்ச்சியாக நாம் பார்த்திருக்கிறோம். இந்த பதிவிலும், மாதம் நீங்கள் சேமிக்கும் 3000 ரூபாயை கொண்டு எப்படி 2 கோடி ரூபாய் சேமிக்கப்போகிறோம் என்பதை பற்றி பார்க்கப்போகிறோம்.
டிமாண்ட் கணக்கு
SIP துவங்கும் முன் நீங்கள் உங்களுக்கென ஒரு டிமாண்ட் கணக்கை ஆரம்பிக்க வேண்டும். SIP போன்ற முறையில், ஸ்டாக் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் செய்ய இந்த கணக்கு வேண்டும்.
பங்குச்சந்தை குறித்த புரிதல்
உங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள சில செயலிகளை கொண்டு, சுலபமாக நீங்கள் ஷேர் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் செய்ய முடியும். ஆனால் பங்குச்சந்தை குறித்த சரியான புரிதல் இல்லாமல் முதலீடு செய்வது நல்லதல்ல. பங்குச்சந்தையை கணிப்பது என்பது யாராலும், எப்போதும் முடியாத ஒன்று என்றாலும், அதன் போக்கை ஓரளவுக்கு நம்மால் யூகிக்க முடியும். அப்படி யூகித்து, நல்ல பங்குகளில் நீங்கள் உங்கள் சேமிப்பை போட வேண்டும்.
25 வயதில் இருந்தே சேமிப்பு
நீங்கள் ஒரு 25 வயது இளைஞர் என்றால், உங்கள் ஓய்வு காலத்திற்காக இன்றிலிருந்தே சேமிக்க வேண்டும். மாதம் 3000 ரூபாயை நீங்கள் SIP முறையில் சேமிக்க துவங்க வேண்டும். சரியாக அடுத்த 33 முதல் 35 ஆண்டுகளுக்கு நீங்கள் தொடர்ச்சியாக இந்த சேமிப்பை கடைபிடிக்க வேண்டும்.
அப்படி செய்து வந்தால், உங்கள் 58 அல்லது 60வது வயதில் சுமார் 11,88,000 ரூபாயை அசலாக சேர்த்திருப்பீர்கள். அதற்கு 13.5 சதவிகிதம் என்ற விகிதத்தில் வட்டி கிடைத்தால் உங்களுக்கு வட்டியாக மட்டும் சுமார் ஒரு கோடியே 72 லட்சம் ரூபாய் கிடைக்கும். ஆகவே உங்கள் அசலோடு சேர்த்து சுமார் 2 கோடி ரூபாய் வரை உங்களால் சேமிக்க முடியும்.
ஆனால் எதிர்வரும் ஆண்டுகளில், இந்திய அளவில் பல இளைஞர்கள் இந்த முதலீடுகளில் பெரிய அளவில் கால்பதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே இன்னும் 25 ஆண்டுகளில், Expected Returns எனப்படும் வட்டி விகிதங்கள் 14 சதவிகிதத்தை தாண்ட கூட வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பு : பங்குச்சந்தை என்பது நிலையற்ற ஒரு விஷயமாகும். ஆகவே அதன் ஏற்ற இறக்கங்களை முடிந்த அளவிற்கு ஆராய்ந்து அதில் பணத்தை முதலீடு செய்யவேண்டும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்