இந்தியா, உலகப் பொருளாதாரத்துல ஒரு பவர்ஹவுஸா உருவாகி வருது. ஆனா, இவ்வளவு காலமும் இந்திய பிராண்ட்கள் உள்ளூர் சந்தையில் நிறைய வெற்றி கண்டாலும், உலக மேடையில பெரிய அளவுல பேர் எடுக்கல. அங்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தல. ஆனா, இப்போ கதை மாறுது!
கடந்த 5-7 வருஷங்களில் இந்த தடைகள் பலவும் குறைஞ்சு, இந்திய பிராண்ட்களுக்கு உலக மேடை திறந்திருக்கு. பொருளாதார வளர்ச்சி, டிஜிட்டல் தளங்கள், மற்றும் இந்தியாவோட உற்பத்தி திறன் ஆகியவை இந்த மாற்றத்துக்கு முக்கிய காரணங்கள். இதைப் பயன்படுத்தி, டைட்டன், ராயல் என்ஃபீல்ட், போட் மாதிரியான பிராண்ட்கள் உலக சந்தைகளில் தங்கள் இடத்தை பிடிக்க ஆரம்பிச்சிருக்காங்க.
டைட்டன், இந்தியாவோட மிகப் பெரிய நகை மற்றும் கடிகார பிராண்ட்களில் ஒண்ணு. ஆனா, இப்போ இந்த நிறுவனம் வெறும் கடிகாரங்களோட நிக்காம, ஸ்மார்ட்வாட்ச்கள், கண்ணாடிகள், மற்றும் நகைகளோட உலக சந்தைகளை குறிவைக்குது. இந்த நிறுவனம் தன்னோட வாட்சஸ் மற்றும் வேரபிள்ஸ் பிரிவில் இருந்து 2026-க்குள் 10,000 கோடி ரூபாய் வருமானத்தை எதிர்பார்க்குது, இதுல ஸ்மார்ட்வாட்ச்கள் பெரிய பங்கு வகிக்குது.
ஸ்மார்ட்வாட்ச் புரட்சி: 2022-ல இந்திய ஸ்மார்ட்வாட்ச் சந்தை 153% வளர்ந்தது, 30.72 மில்லியன் யூனிட்கள் விற்பனையானது. டைட்டன், இந்த வளர்ச்சியைப் பயன்படுத்தி, Titan Smart, Titan Smart Pro, Fastrack Reflex Vox மாதிரியான பொருட்களை அறிமுகப்படுத்தியது. 2022-ல டைட்டனோட ஸ்மார்ட்வாட்ச் விற்பனை 40 மடங்கு அதிகரிச்சது
நகை சந்தை: டைட்டனோட தனிஷ்க் பிராண்ட், அமெரிக்கா, UAE, சிங்கப்பூர் மாதிரியான சந்தைகளில் நகைகளை விற்க ஆரம்பிச்சிருக்கு. இந்திய கைவினைப்பொருட்களோட தரத்தை வெளிநாட்டு நுகர்வோருக்கு அறிமுகப்படுத்துறது இதோட முக்கிய நோக்கம்.
சவால்கள்: ஆப்பிள், சாம்சங் மாதிரியான உலகளாவிய ஜாம்பவான்களோட போட்டியிடுறது, மற்றும் இந்திய ஸ்டார்ட்அப்கள் (நாய்ஸ், போட்) உடனான உள்ளூர் போட்டி ஆகியவை டைட்டனுக்கு பெரிய சவால். இருந்தாலும், டைட்டனோட உயர்தர வடிவமைப்பு (எ.கா., Titan Celestor ஸ்மார்ட்வாட்ச்) உலக சந்தைகளில் கவனத்தை ஈர்க்குது.
ராயல் என்ஃபீல்ட், இந்தியாவோட மோட்டார்சைக்கிள் சந்தையில ஒரு கல்ட் அந்தஸ்து வைச்சிருக்கு. 1901-ல பிரிட்டிஷ் பிராண்டா ஆரம்பிச்ச இது, 1949-ல இந்தியாவுக்கு வந்து, இப்போ உலகளாவிய மோட்டார்சைக்கிள் பிராண்டா மாறியிருக்கு. உலகளாவிய global recall உள்ள இந்தியாவோட முதல் பிராண்டா இது கருதப்படுது.
250-750cc மிட்-வெயிட் மோட்டார்சைக்கிள் சந்தையில ராயல் என்ஃபீல்ட் தனித்துவமான இடத்தை பிடிச்சிருக்கு. ரெட்ரோ ஸ்டைல், குறைந்த பராமரிப்பு, மற்றும் டார்க்-ரிச் பைக்குகள், ஐரோப்பா, தென் அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியாவில உள்ள ஓய்வு பயணிகளை (leisure riders) கவருது. 2024 நிதியாண்டில், Eicher Motors 78,000 ராயல் என்ஃபீல்ட் பைக்குகளை ஏற்றுமதி செஞ்சது, இது மொத்த விற்பனையில் 12% ஆகும்.
தாய்லாந்து, பிரேசில், UK-ல உள்ள CKD (Completely Knocked Down) அசெம்பிளி ஆலைகள், உள்ளூர் சந்தைகளுக்கு ஏத்த பைக்குகளை உற்பத்தி செய்யுது. இது, இறக்குமதி செலவை குறைச்சு, விலையை போட்டியாக வைக்க உதவுது. 2024-ல Bear 650, Bullet Battalion Black, Scram 440 மாதிரியான புதிய மாடல்கள் அறிமுகமானது, 17.5% விற்பனை வளர்ச்சியை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
போட் (boAt), இந்தியாவோட இளைய தலைமுறைகள் அதிகம் விரும்பும் எலக்ட்ரானிக்ஸ் பிராண்ட்களில் ஒண்ணு, 2016-ல ஆரம்பிச்சு, 2022-க்குள்ள உலகளாவிய வேரபிள்ஸ் சந்தையில் ஐந்தாவது இடத்தை பிடிச்சிருக்கு. இந்தியாவோட மலிவு உற்பத்தி திறனைப் பயன்படுத்தி, இளைஞர்களை குறிவைக்குற ஹெட்ஃபோன்கள், ஸ்மார்ட்வாட்ச்கள், மற்றும் ஆடியோ பொருட்களை உலக சந்தைகளுக்கு கொண்டு போகுது.
போட், இந்தியாவோட குறைந்த செலவு உற்பத்தியை (low-cost manufacturing) பயன்படுத்தி, உயர்தர ஆடியோ பொருட்களை மலிவு விலையில் கொடுக்குது. இது, உலகளாவிய சந்தைகளில் போட்டியிட உதவுது.
விநியோக விரிவாக்கம்: Amazon UAE, Flipkart International மாதிரியான தளங்கள் மூலமா, போட் தன்னோட பொருட்களை மத்திய கிழக்கு, ஐரோப்பா, மற்றும் தென்கிழக்கு ஆசியாவுக்கு விற்குது. 2022-ல Dixon Technologies உடனான கூட்டணி, “Made-in-India” வயர்லெஸ் ஆடியோ பொருட்களின் உற்பத்தியை அதிகரிச்சது.
அதுமட்டுடமின்றி, இந்திய ஸ்மார்ட் வாட்ச் சந்தையில் Noise மற்றும் Boltt உடன் சேர்ந்து 71% பங்கை பிடிச்சது. இந்த வெற்றியை உலக சந்தைகளுக்கு எடுத்து செல்லுது.
பிராண்ட் அடையாளம்: போட், இளைஞர்களுக்கு பிரபலமானாலும், ஆப்பிள், சோனி மாதிரியான பிராண்ட்களோட ஒப்பிடும்போது, உலகளாவிய பிராண்ட் அடையாளம் இன்னும் வளர வேண்டியிருக்கு. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள விதிமுறைகள் (regulations), உலகளாவிய விரிவாக்கத்துக்கு தடையாக இருக்கு.
இந்திய பிராண்ட்கள் இப்போ உலக மேடையில் பந்தயம் கட்டுறதுக்கு பின்னால் சில முக்கிய மாற்றங்கள் இருக்கு:
மூலதன அணுகல்: இந்திய நிறுவனங்களுக்கு இப்போ முதலீட்டாளர்கள், IPO-கள் மூலமா பெரிய மூலதனம் கிடைக்குது. எ.கா., போட்-இன் மதிப்பு 2022-ல $1.4 பில்லியனாக உயர்ந்தது.
டிஜிட்டல் தளங்கள்: Amazon, Flipkart மாதிரியான இ-காமர்ஸ் தளங்கள், உலகளாவிய விற்பனையை சுலபமாக்குது.
இந்தியாவோட உற்பத்தி திறன்: குறைந்த செலவு உற்பத்தி, மற்றும் “Make in India” முயற்சிகள், இந்திய பிராண்ட்களுக்கு போட்டியிட உதவுது. இதனால், உலகம் முழுக்க பரவலாக இந்திய பொருட்களை “நம்பகமான” மற்றும் “தனித்துவமான”னு பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க. மேலும், இந்தியாவோட பொருளாதார வளர்ச்சி, இந்திய பிராண்ட்களுக்கு உலகளாவிய நம்பிக்கையை கொடுத்திருக்கு.
இந்திய பிராண்ட்களோட உலகளாவிய பயணம், ஒரு புது அத்தியாயத்தோட ஆரம்பம் தான். டைட்டன், ராயல் என்ஃபீல்ட், போட் ஆகியவை, இந்தியாவோட பொருளாதார வளர்ச்சி, உற்பத்தி திறன், மற்றும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உலக மேடையில் தங்கள் இடத்தை பிடிக்குது. இவையெல்லாம் வெறும் ஆரம்பம்தான். இனி தன ஒரு பெரிய அலையே வரப்போகுது!
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்