பேரிடர் காலத்தில் ஆதரவற்றோருக்கு ஆதரவு கொடுக்கும் ஆசிரமம்..!

பேரிடர் காலத்தில் ஆதரவற்றோருக்கு ஆதரவு கொடுக்கும் ஆசிரமம்..!
Published on
Updated on
1 min read

கொரோனா தொற்று அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி மக்களிடையே பெரிய தாக்கத்தை உருவாக்கியுள்ளது. தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்தாலும் தொற்று மேலும்  அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் அரசு சில கட்டுபாடுகளுடன் ஊரடங்கை அறிவித்துள்ளது

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவ ஸ்ரீ தியானேஷ்வர் அம்மா ஆசிரமம் சார்பாக, திருவண்ணாமலை கிரிவலபாதையில் உள்ள சாதுக்கள், ஆதரவற்றோர் மற்றும் பொதுமக்களை கோவிட் 19 தொற்றிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு, அவர்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் மூலிகை கசாயம், பாதாம் பால், காய்கறி சூப், சுக்கு மிளகு பால், பழங்கள், மற்றும் மருத்துவர்களின் ஆலோசனையின்படி சத்து மாத்திரைகளும் கடந்த மூன்று மாதங்களாக நாள்தோறும்  வழங்கப்பட்டு வருகின்றது.

இவற்றோடு ஆதரவற்றோருக்கான அடிப்படை தேவைகளான உணவு, உடை மற்றும் இலவச மருத்துவ சேவையினையும்  ஆசிரமம் வழங்கி வருகின்றது. அதனை தொடர்ந்த இன்று சாதுக்கள், ஆதரவற்றோர் மற்றும் பொதுமக்களுக்கு N95 mask (என் 95 முக கவசம்) ஜோல்னா பை, சுக்கு மிளகு பால், உணவு, உடை மற்றும் மாம்பழம் வழங்கப்பட்டது.  மேலும் சிவ ஸ்ரீ தியானேஷ்வர் அம்மா ஆசிரமத்தின் இந்த சேவையின் வாயிலாக தினமும் சுமார் 1800 பேர் பயனடைகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com