விபச்சார வழக்கில் சிக்கிய 2 தமிழ் நடிகைகள்: பெயரை வெளியிட மறுக்கும் போலீசார்

விபச்சார வழக்கில் சிக்கிய 2 தமிழ் நடிகைகள்: பெயரை வெளியிட மறுக்கும் போலீசார்
Published on
Updated on
1 min read

மும்பையில் நடந்த விபச்சார ரெய்டில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு நடிகைகள் பிடிபட்டுள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் 30 லட்சத்திற்கும் மேலான பாலியல் தொழிலாளர்கள் இருக்கும் நிலையில் அவர்களில் பெரும்பாலானோர் விபச்சாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விபரீதம் தெரியாமல் சில இளம்பெண்களும் பணத்திற்காக ஆசைப்பட்டு பாலியல் தொழிலுக்கு வருகின்றனர். இவர்களை காவல்துறையினர் அவ்வபோது கைது செய்து எச்சரித்து அனுப்புகின்றனர்.

இதனிடையே, மும்பையில் உள்ள பங்களா ஒன்றில் பெண்கள் அடிக்கடி சென்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து, அங்கு விரைந்த போலீசார் 2 பெண்கள் உட்பட 5 பேரை அதிரடியாக பிடித்து விசாரித்துள்ளனர்.

விசாரணையில், 5 பேரில் ஒருவர் அந்த பங்களாவின் உரிமையாளர் என்பதும் 2 பேர் புரோக்கர்கள் மற்றும் மேலும் இருவர் பெண் நடிகைகள் என தெரியவந்துள்ளது. குடும்ப வறுமை காரணமாக இத்தொழிலுக்கு வந்ததாக அழுது கதறிய அந்த நடிகைகள் மீது வழக்கு மட்டும் பதிவு செய்துள்ள போலீசார், அவர்களது பெயரை போலீசார் வெளியிட மறுத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com