புதிய மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது..!

புதிய மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது..!
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் இன்று முதல் புதிய மின்கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

செந்தில் பாலாஜி அறிவிப்பு:

தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த ஜூலை மாதம் அறிவித்தார். அதற்கு மத்திய அரசின் அழுத்தம் காரணமாக தான் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். 

200 யூனிட்:

அதன்படி, 200 யூனிட்டுகளுக்கு மேல் 2 மாதங்களுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 27 ரூபாய் 50 காசுகளும், 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு 72 ரூபாய் 50 காசும் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

400 யூனிட்:

இதேபோல, 2 மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும்  மின் நுகர்வோர்களுக்கு 147 ரூபாய் 50 காசுகள் உயர்த்த உத்தேசிக்கப்பட்டது. அதேபோன்று, 100 யூனிட் வரையிலான இலவச மின்சாரம் தொடரும் என்றும், குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதேபோல், இரண்டு மாதங்களுக்கு 20 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களிடன் கருத்துகேட்பு:

தொடர்ந்து, மின்சார கட்டணம் உயர்வு குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டதுடன், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விரைவில் கட்டண உயர்வை பரிசீலித்து ஒப்புதல் வழங்கும் என்று அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். 

ஒப்புதல் அளித்தது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்:

இந்த நிலையில் தற்போது மின் கட்டண உயர்வுக்கு ஒப்புதல் அளித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி  8 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

புதிய மின்கட்டணம் அமல்:

பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்ட நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மின்கட்டண உயர்வு  2026 முதல் 2027 ஆம் ஆண்டு வரை புதிய மின்கட்டண உயர்வு அமலில் இருக்கும் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com