”தன்னை நன்றாக பார்த்துக்கொள்ள தெரியும்” ரூ.200 கோடி ஜீவனாம்சத்தை  ஏற்க மறுத்த நடிகை சமந்தா...

நாக சைதன்யா குடும்பத்தினர் வழங்க முன்வந்த ரூ.200 கோடி ஜீவனாம்சத்தை நடிகை சமந்தா ஏற்க மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
”தன்னை நன்றாக பார்த்துக்கொள்ள தெரியும்” ரூ.200 கோடி ஜீவனாம்சத்தை  ஏற்க மறுத்த நடிகை சமந்தா...
Published on
Updated on
2 min read

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் பிரபல தெலுங்கு நடிகரும், நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவும் 7 ஆண்டுகளாக காதலித்து வந்தார்ர். இவர்களது திருமணம் கடந்த 2017 ஆம் ஆண்டு பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகும் நடித்து வந்த சமந்தா அடுத்தடுத்து வெற்றிப் படங்களையும் கொடுத்தார்.

அடிக்கடி சமூக வலைதளங்களில் இருவரும் இணைந்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர். திரையுலகில் மிகவும் அன்னியோன்யமான தம்பதி என பலராலும் பாராட்டப்பட்ட இவர்கள் திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ள இருப்பதாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தகவல் பரவி வந்தது. ஆனால், இது குறித்து பொதுவெளியில் இருவரும் தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தனர்.

நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவுடனான திருமண உறவை தான் முறித்துக் கொள்வதாக தகவல் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளார் என தகவல் பரவின. இன்று கூட இதுகுறித்து இருவரும் பொது விளக்கம் அளிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. அதிலும் சிலர் குழந்தை பெற்றுக்கொள்வது தொடர்பாக சமந்தா அறிவிக்க இருக்கிறார் என்ற தகவலை பரப்பினர்.

இதனிடையே சமந்தாவும் நாக சைதன்யாவும் ஒரே நேரத்தில் விவாகரத்து முடிவை தத்தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றனர். இருவரின் பதிவிலும் சமந்தா, சைதன்யா என்ற வார்த்தை மட்டுமே மாறி இருக்கிறது. மற்றபடி ஒரே தகவலையே அவர்கள் பதிவிட்டு உள்ளனர். குறிப்பாக தங்கள் நீண்ட நாள் நட்பு தொடரும் என்றும், இந்த கடினமான காலத்தில் தங்களின் தனிப்பட்ட ரகசியம் மற்றும் சுய உரிமைக்கு மதிப்பளிக்குமாறும் ரசிகர்களிடம் இருவரும் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

இதனிடையே,விவாகரத்துக்காக நாக சைதன்யா குடும்பம் சமந்தாவுக்கு ரூ.200 கோடி ஜீவனாம்சம் தர முன் வந்ததாகவும், அதை சமந்தா ஏற்க மறுத்துவிட்டதாகவும் தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. தன்னை நன்றாக பார்த்துக்கொள்ள தெரியும் என்றும் ஜீவனாம்சம் வேண்டாம் எனவும் சமந்தா கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது. சமந்தா - நாக சைதன்யா இருவரும் பிரிவதாக வெளியான தகவலை அறிந்த நாகார்ஜுனா அக்கினேனி குடும்பத்தினர் சமாதான முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். ஆனால், அது பலனளிக்காத நிலையில் தற்போது இருவரும் விவாகரத்து முடிவை அறிவித்து இருக்கின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com