காதல் திருமண விவகாரம்: நீதிமன்ற வளாகத்திலே கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம்..! பூவை மூர்த்தியின் நிலை என்ன?

சிறுவன் கடத்தலுக்கு ஆயுதப்படை ஏடிஜிபி -யான எச்.எம்.ஜெயராமின் காவல் வாகனம்...
poovai jagan moorthy nad adgp jeyaram
poovai jagan moorthy nad adgp jeyaram
Published on
Updated on
2 min read

திருவள்ளூர் மாவட்டம்  திருவாலங்காடு அருகே  களாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த யுவராஜா என்பவரின் மகன் தனுஷ்(23)  இவருக்கும் தேனி  மாவட்டத்தைச் சேர்ந்த விஜயா ஸ்ரீ (21) என்ற இளம் பெண்ணுடன் கடந்த மாதம் 15ம் தேதி காதல்  திருமணம் செய்துக் கொண்டு  தலைமறைவானதாக கூறப்படுகிறது.  இந்நிலையில்    களாம்பாக்காத்தில்  வீட்டில் இருந்த தனுஷ் தம்பி இந்திர சந்த்(16) என்ற சிறுவனை  காரில் வந்த கும்பல் கடத்திச் சென்றுள்ளனர். இது குறித்து  தனுஷ் தயார்  காவல்துறை கட்டுப்பாடு அறைக்கு தொடர்பு கொண்டு புகார் செய்தார்..  திருவாலங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தேனி மாவட்டத்தைச் சேர்ந்த  வனராஜா(55), மணிகண்டன்(49), கணேசன்(47) ஆகிய 3 பேரை சில நாட்களுக்கு முன்பு கைது செய்து சிறையில் அடைத்தனர்.  இதற்கிடையில் நேற்று சிறுவன் கடத்தல் சம்பவத்தில் எஸ் பி தலைமையிலான தனிப்படை போலீசார் மகேஸ்வரி என்ற பெண்ணை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக புரட்சி பாரதம் கட்சி தலைவரும் கே.வி குப்பம் எம்.எல்.ஏ -வுமான  பூவை ஜெகன் மூர்த்தி இந்த சம்பவத்தில் தலையிட்டு பேசியதாகவும், கடத்தலில் அவருக்கும் தொடர்பிருப்பதாகவும் கூறி அவரை கைது செய்தனர்.

சிறுவன் கடத்தலுக்கு ஆயுதப்படை ஏடிஜிபி -யான எச்.எம்.ஜெயராமின் காவல் வாகனம் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் கடத்தல் சம்பவம் தொடர்பாக திருவாலங்காடு போலீஸார் வழக்கு பதிவு செய்து, தொழிலதிபர் வனராஜ், அவரது உறவினர்கள் மணிகண்டன், கணேசன், மகேஸ்வரி, பூந்தமல்லி துத்தம்பாக்கம் வழக்கறிஞர் சரத்குமார் ஆகிய 5 பேரை கடந்த 13-ம் தேதி கைது செய்தனர். இந்த நிலையில், ஜெகன்மூர்த்தி முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதை அவசர மனுவாக விசாரிக்குமாறு கடந்த ஞாயிறன்று முறையிடப்பட்டது. ஆனால், மறுநாள் விசாரிப்பதாக நீதிபதி வேல்முருகன் தெரிவித்தார்.

அதன்படி, நீதிபதி வேல்முருகன் முன்பு இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. ஜெகன்மூர்த்தி தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆஜராகி, ‘‘இந்த வழக்குக்கும், ஜெகன்மூர்த்திக்கும் எந்த தொடர்பும் இல்லை’’ என வாதிட்டார். போலீஸ் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஏ.தாமோதரன், ‘‘சிறுவன் கடத்தல் சம்பவம் நடந்தபோது, முன்னாள் காவல் அதிகாரி மகேஸ்வரியும், ஜெகன்மூர்த்தி எம்எல்ஏவும் பூந்தமல்லியில் உள்ள ஓட்டலில் இரவு 11 மணி முதல் அதிகாலை 1 மணி வரை பேசியுள்ளனர். கடத்தலுக்கு ஏடிஜிபி டிஜிபி ஜெயராம் தனது காரை கொடுத்து அனுப்பியுள்ளார். போலீஸார்தான் அந்த வாகனத்தை ஓட்டியுள்ளனர். இந்த கடத்தலில் அதிக அளவில் பணம் கைமாறியுள்ளது. ஜெகன்மூர்த்தியை விசாரித்தால் உண்மைகள் தெரியும்’’ என்றார்.

இதையடுத்து, எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தியும், ஏடிஜிபி ஜெயராமும் பிற்பகல் 2.30 மணிக்கு ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். ஏடிஜிபி ஜெயராம் 2.30 மணிக்கு ஆஜரானார். வழக்கறிஞர்கள் உடன்  வந்த ஜெகன்மூர்த்தி 3.45 மணிக்கு ஆஜரானார். அப்போது, எம்எல்ஏ ஜெகன்மூர்த்தியிடம் நீதிபதி வேல்முருகன் கேள்விகளை எழுப்பினார். 

 “உங்களை நம்பி 80 ஆயிரம் பேர் வாக்களித்துள்ளனர். நீங்கள் யார், என்ன செய்கிறீர்கள் என்றெல்லாம் அவர்களுக்கு தெரியட்டும் என்றுதான் ஆஜராக உத்தரவிட்டேன். 2 பேர் காதல் திருமணம் செய்ததற்காக வீடு புகுந்து மிரட்டி, சிறுவனை கடத்துவீர்களா? சட்டம் இயற்றும் இடத்தில் உள்ள நீங்கள் சட்டத்தை மதித்து நடந்திருக்க வேண்டும். மாறாக, 2 ஆயிரம் பேரை நிறுத்தி போலீஸ் விசாரணைக்கு இடையூறு செய்துள்ளீர்கள்.

எம்.பி., எம்எல்ஏ, போலீஸ் அதிகாரிகள் யாராக இருந்தாலும் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தால் நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது. (அரசு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி) இந்த வழக்கில் ஏடிஜிபிக்கு தொடர்பு இருப்பது கண்கூடாக தெரிந்தும், அவரது பெயரை எஃப்ஐஆரில் ஏன் சேர்க்கவில்லை.? என்று கேட்டார். உயர் அதிகாரி என்பதால் காப்பாற்ற நினைக்கிறீர்களா. அவர் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது. எனவே, ஏடிஜிபி ஜெயராமை கைது செய்து, அவரிடம் போலீஸார் விசாரிக்க வேண்டும். அதேபோல, எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தியும் கூட்டத்தை கூட்டாமல் தனியாக போலீஸ் விசாரணைக்கு சென்று ஒத்துழைப்பு தரவேண்டும்.இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூன் 26-ம் தேதிக்கு தள்ளி வைத்தார். ஏடிஜிபி ஜெயராமை உயர் நீதிமன்றத்திலேயே போலீஸார் கைது செய்தனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com