
கடந்த சில நாட்களாகவே பாமகவில் உள்கட்சி பூசல் தொடர்கிறது… சமீபத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை கூட்டி, “அன்புமணியை எம்.பி ஆக்கி பெரும் தவறிழைத்து விட்டேன். அவர் முகுந்தன் நியமன விவகாரத்தில் தன் தாயையே பாட்டிலை தூக்கி அடிக்க சென்றவர். பாஜக கூட்டணி விவகாரத்தில் “அன்புமணியும் அவர் மனைவியும் என் காலைப் பிடித்துக்கொண்டு கதறி அழுதனர்” என பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்” என பரபரப்பு குற்றச்சாட்டை சொல்லியிருந்தார்.
பல கட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகும்…
ஆனால் இவர்களுக்கு இடையேயான இந்த மோதல் போக்கு நிச்சயம் கட்சியை சீர்குலைக்கும் என்று தெரிந்த நலம் விரும்பிகள் பலர் தைலாபுரத்துக்கும், பனையூருக்கும் இடையே எத்தனையோ கட்ட சமரச செயலில் ஈடுபட்டனர். ஆனால் எதுவும் எடுபடவில்லை.
குறுக்கே வந்த குருமூர்த்தி!.
தேர்தல் நேரம் என்பதால் பாமக -வின் சார்பு எந்த கட்சிக்கு என்பது மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக பாமக அதிமுக கூட்டணியோடுதான் செல்லும் என்றாலும் கூட ராமதாஸ் வாயிலிருந்து அதுபற்றி ஒரு வார்த்தைகூட வரவில்லை. இந்த நிலையில்தான் சில தினங்களுக்கு முன்பு துக்ளக் குருமூர்த்தி அதிமுக -வின் சைதை துரைசாமியோடு சென்று ராமதாஸை சந்தித்தனர். அதன் பிறகு மகன், மகள் மற்றும் பேர பிள்ளைகளை பார்ப்பதற்காக சென்னையெல்லாம் சென்றுவிட்டு வந்தார். சரி இந்த பஞ்சாயத்து முடிந்திருக்கும் என்று பார்த்தால் தற்போது அது பூதாகரமாக வெடித்துள்ளது.
கட்சியின் முகம்..!
ராமதாஸ் நீக்கம் செய்து அறிவிக்கும் நிர்வாகிகள், மீண்டும் பொறுப்பில் இருப்பதாக அன்புமணிஅறிவிப்பு வெளியிட்டு வருகிறார்.ஆனால் இந்த போக்கு நிர்வாகிகளாய் மேலும் குழப்பி உள்ளது.
இந்நிலையில், பாமக சமூக நீதிப் பேரவை மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து வழக்கறிஞர் பாலுவை நீக்கி, அவருக்கு மாற்றாக வழக்கறிஞர் கோபியை மாநிலத் தலைவராக பணியமர்த்தி ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட பாமக செயலாளராக சுரேஷ், காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் சங்க தலைவராக மூர்த்தி, மாநிலத் தேர்தல் பணி குழு செயலாளராக பூபால் கண்ணன், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளராக ஸ்ரீதர் ஆகியோரை நியமித்து ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.