புள்ளி விவரங்களை புட்டு புட்டு வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்..!! மூக்குடைந்து வாயடைத்துப் போன சீமான்..!

புள்ளி விவரங்களை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!!
புள்ளி விவரங்களை புட்டு புட்டு வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்..!! மூக்குடைந்து வாயடைத்துப் போன சீமான்..!
தேர்தல் பிரசாரத்தின் போது முதலமைச்சர் ஸ்டாலின் ஊர் ஊராக சென்று கிராம சபைக் கூட்டம் என்ற ஒன்றை நடத்தி மக்களிடம் இருந்து மனுக்களை நேரடியாக பெற்றார். அவ்வாறு பெறப்பட்ட மனுக்களை பெட்டியில் வைத்து பூட்டிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தவுடன், இந்த மனுக்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 
இந்த செயலை அதிமுக முதல், நாம் தமிழர் கட்சி வரை பலரும் தேர்தல் பிரசாரத்தின் போது கிண்டல் அடித்தனர். அது எப்படி 100 நாட்களுக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என கேள்வியெழுப்பினர். இந்த நிலையில், தேர்தல் முடிந்து திமுக வெற்றி பெற்று விட்டது. 
பதவி ஏற்ற நாள் முதல் கொரோனா பரவலையும் சமாளித்துக் கொண்டு தேர்தல் அறிக்கையில் கூறிய திட்டங்களையும் மெது மெதுவாக செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அந்த வகையில் கிராம சபை கூட்டத்தின் போது பெறப்பட்ட மனுக்களை விசாரிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் ”உங்கள் தொகுதியில் முதல் அமைச்சர்” என்னும் திட்டத்தை உருவாக்கி அதற்கென தனி இணையதளம் அமைத்து, ஐஏஎஸ் அதிகார் ஷில்பா பிரபாகரனை தனி அதிகாரியாகவும் நியமித்தார் ஸ்டாலின். 
இதற்கிடையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்களின் மனுக்கள் அடங்கிய பெட்டி எங்கே எனவும், சாவி தொலைந்து விட்டதா? அல்லது பெட்டியே தொலைந்து விட்டதா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இதுவரை பெறப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை, துறைவாரியான மனுக்களின் எண்ணிக்கை, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள மனுக்களின் எண்ணிக்கை என புட்டு புட்டு வைத்துள்ளது தமிழக அரசு. 
அதன்படி, ஏற்றுக்கொள்ளப்பட்ட மனுக்களிலிருந்து சில பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, முதலமைச்சரால் கடந்த 18-5-2021 அன்று 549 நபர்களுக்கும், 3-6-2021 அன்று 3,213 நபர்களுக்கு மற்றும் 11-6-2021 அன்று 1,100 நபர்களுக்கும் நலத் திட்ட உதவிகளுக்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதுவரை 1,21,720 மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவற்றில், 50,643 மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதில், வருவாய்த்துறையின் கீழ் 18,774 மனுக்கள், சமூக நலத் துறை தொடர்பான 933 மனுக்கள், மற்ற துறைகள் சார்ந்த 12,800 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. 
தனியார் வேலைவாய்ப்பு கோரி பெறப்பட்ட மனுக்களில் 2,545 மனுக்களில், மனுதாரர்களின் விவரங்கள் www.tnprivatejobs.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, அவர்களுக்காக இணையதள வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு 184 பேருக்கு உடனடியாக தனியார் நிறுவன வேலைவாப்பு பெறப்பட்டதாக தெரிவித்துள்ளது. 
இப்படி துறை வாரியாக பெறப்பட்ட மனுக்கள், தீர்வு காணப்பட்ட மனுக்கள் என தெள்ளத் தெளிவாக அனைத்து விவரங்களும் தெரிவிக்கப்பட்டதால், கேள்வி, கிண்டல் அடித்த சீமான் உள்ளிட்ட தலைவர்கள் தேள் கொட்டியது போல் அமைதி காத்து வருகின்றனர். 
logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com