திமுகவில் சேரும் தேமுதிக மாவட்ட செயலாளர்கள்... விரைவில் இணைப்பு விழா!!

திமுகவில் சேரும் தேமுதிக மாவட்ட செயலாளர்கள்... விரைவில் இணைப்பு விழா!!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. அதேபோல அதிமுக கூட்டணியும் பெரும் தோல்வியை சந்திக்காமல் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் இவர்களுக்கு மாற்றாக மூன்றாம் அணியை அமைத்த மக்கள் நீதி மய்யம் மற்றும் அமமுக-தேமுதிக கூட்டணியின் நிலை தான் பரிதாபமாக மாறியுள்ளது. 

தமிழக அரசியல் அரங்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த கூட்டணி பெரும் தோல்வியை தழுவியது. நாம் தமிழர் கட்சி தமிழகம் முழக்க பெரும்பான்மை இடங்களில் மூன்றாம் இடம் பிடித்து தங்களை நிரூபித்தது. மக்கள் நீதி மய்யம் கட்சி கூட நகரப்பகுதிகளில் கணிசமான வாக்குகளை பெற்றது. அமமுகவும் தென்மாவட்டம்,டெல்ட்டாவில் கணிசமான வாக்குகளைப் பெற அதன் கூட்டணியான தேமுதிக தமிழகம் முழுவதும் பலத்த அடியை வாங்கியுள்ளது.

2006 தேர்தலில் பெரும் அரசியல் சக்தியாக எழுச்சிபெற்ற தேமுதிக அதன் உச்சமாக 2011ம் ஆண்டில் தமிழக பிரதான எதிர்க்கட்சியாக உருமாறியது. அதன்பின் வளரும் என்று எதிர்பார்க்கப்பட்ட தேமுதிக பெரும் சரிவை சந்தித்தது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் போக அங்கு ஆரம்பித்தது தேமுதிகவின் வீழ்ச்சி.

விஜயகாந்த்துக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் தேமுதிகவை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றார்கள் பிரேமலதா விஜயகாந்தும் அவரது தம்பி சுதீசும். 2015ம் ஆண்டு நடந்த தேர்தலில் தேமுதிகவை கூட்டணிக்குள் இழுக்க திமுக தலைவர் கருணாநிதி முயன்றாலும் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இணைந்தது தேமுதிக. இது அந்த கட்சியின் செல்வாக்கை அடியோடு அழித்தது. அதன்பின் 2019ம் நாடாளுமன்ற தேர்தலிலும் தொடர்ந்தது. 

பிரேமலதா, அவரது மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் பேச்சால் அதிமுக கூட்டணியில்  இருந்து விலகி அமமுக கூட்டணியில் இணைந்தது. அதன் பின் நடந்தது தான் மேலே கூறியிருப்பது.

இந்நிலையில், தேர்தல் தோல்வியால் தேமுதிக நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். மேலும் தேர்தலுக்காக கட்சி மேலிடம் பணம் ஒதுக்காததால் அவர்கள் தங்கள் கைகாசை போட்டு தான்  தேர்தல் வேலைகளை பார்த்துள்ளார்கள். ஆகவே இனியும் தேமுதிவில் இருந்தால் தங்களுக்கு எதிர்காலம் இல்லை என்பதை புரிந்து கட்சி மாற முடிவெடுத்துள்ளார்கள். 

ஆகவே கூடிய விரைவில் தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள் திமுகவால் இணைவார்கள் என்று தேமுதிக வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும் இதற்கு திமுகவும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பு முடிந்ததும் தேமுதிக கூடாரமே காலியாகும் என்று கூறப்படுகிறது.  

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com