ராஜீவ் கொலை நடந்த போது இக்பால் என்ற போலீஸ் சூப்பிரண்ட் கொலை செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோரை போலீசார் கொலை செய்தனர். அவர்களுக்கு கட்சியினர் லட்சம் லட்சமாக நிவாரணம் வழங்கினர். தமிழக அரசும் அவர்களது வாரிசுகளுக்கு பணி வழங்கியது. ஆனால் ராஜீவ் காந்தி படுகொலையில், உயிரிழந்தவர்களுக்கு இதுவரை எந்த உதவியும் செய்யவில்லை. இது அநீதி அல்லவா? இவ்வாறு கூறினார் அனுசுயா.