சசிகலா போயஸ் கார்டனுக்கு என்ட்ரி... ஓபிஎஸ், இபிஎஸ் பகீர் 

சசிகலா போயஸ் கார்டனுக்கு என்ட்ரி... ஓபிஎஸ், இபிஎஸ் பகீர் 

போயஸ் கார்டன் வீட்டுக்கு சசிகலா மீண்டும் என்ட்ரியாகும் வேலைகளில் இறங்கி இருப்பதாக  தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளது. இந்த தகவல் ஓபிஎஸ், இபிஎஸ் வட்டாரத்தை அதிர வைத்துள்ளது.

மக்களால் நான்.. மக்களுக்காகவே நான், எனக்கென்று யாரும் இல்லை தமிழக மக்கள் தான் என் குடும்பம், என் வாழ்வு தவ வாழ்வு அது உங்களுக்காகவே என்று முழங்கிய இரும்பு பெண்மணி முதல்வர் ஜெயலலிதா. அதிமுகவில் தனிப்பெரும் தலைவியாக  போற்றப்படுவர். அவர் வசித்து வந்த போயஸ் கார்டன் இல்லத்தை அதிமுக தொடண்டர்கள் கோயிலாகவே  போற்றி வருகின்றனர். 

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் போயஸ் கார்டன் வேதா இல்லம் நினைவில்லமாக அறிவிக்கப்பட்டது. அதற்காக நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம் அப்போது இருந்த அதிமுக அரசால் பிறப்பிக்கப்பட்டு வேதா இல்லமும் அரசுடைமையாக்கப்பட்டது.

அரசுடைமையாக்கியதை எதிர்த்து தீபா, தீபக் இருவரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.சட்டப்பூர்வ வாரிசுகளின்   எதிர்ப்பை கருத்தில் கொள்ளாமல் வேதா இல்லத்தை அரசுடைமையாக்கியதற்கு  கண்டனங்கள் வலுத்தன.அதில் தீபா, தீபக் ஆகிய இருவருக்கும்  வெற்றி கிடைக்கவே வேதா இல்லத்தை அவர்களிடம்  ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது 

தீர்ப்பில் வெற்றி கிடைத்தாலும், வேதா இல்லத்தை அனுபவிப்பதில் இன்னும் சிக்கல் நிலவி வருகிறது. ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2008-2009ம் ஆண்டு வருமானவரி கண்க்கு தாக்கல் செய்யாதது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. அந்த வழக்கில் தீபா, தீபக் இருவரையும் இணைக்க உத்தரவிட்டு உள்ளது  என்று கூறப்படுகிறது.

இது குறித்த தீர்ப்பு வெளியாகும் பட்சத்தில் ஜெயலலிதா  தரப்பு எவ்வளவு வரி தொகை செலுத்த வேண்டி இருக்கும்? மிக பெரிய தொகையாக இருந்தால், அதை செலுத்த முடியாமல் போனால் என்னாகும்? போன்ற கேள்விகழளும் தக்க சமயத்தில் வந்து விழுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தொகை பெரியதாக இருக்கும் பட்சத்தில் அதை கட்ட முடியுமா?  தீபா, தீபக் அதை காட்டுவார்களா?... என்கிற மாதிரியான கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகிறது. 

இது ஒரு பக்கம் இருக்க...இங்குதான் சசிகலா ஒரு  மாஸ்டர் பிளான் போட்டு கொண்டு இருக்கிறார். பணம் கட்ட முடியாத சூழலுக்கு தீபா, தீபக் ஆகியோர் தள்ளப்பட்டால் அந்த தொகையை சசிகலா தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. 

 கோர்ட் சொல்லும் தொகையை கட்டி , சசிகலாவும் போயஸ் கார்டனில் என்ட்ரியாகி விடுவார் என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.இப்படி இருக்கும் பட்சத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஸ்  அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க முடிவு செய்திருப்பதாகவும் ஒரு  தகவல் கசிந்துள்ளன.சசிகலா இப்படி அமைதியாக காய் நகர்த்தி வருவதால் ஓபிஎஸ் மற்றும் இபிஸ்  இன்னும் டென்ஷன் அதிகமாகி இருக்கிறதாம்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com