அடேங்கப்பா! இது நம்ம List-லயே இல்லையே... - தவெக -வில் இணைந்த முக்கிய புள்ளிகள்..! 25% வாக்குகள் விஜய் கையில்…!

முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி அருண் ராஜூக்கு கொள்கைப் பரப்பு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது..
Formar IRS officer arun raj and tvk adhav arjuna
Formar IRS officer arun raj and tvk adhav arjuna
Published on
Updated on
2 min read

2026 -தேர்தல் நெருங்க நெருங்க தமிழ்நாடு அரசியில் சூடுபிடித்திருக்கிறது. கூட்டணி ஏமாளிகள், கட்சித் தவளைகள், போராட்டங்கள், நிர்வாகி நியமனங்கள் என தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி அலுவலகங்கள் அல்லோலப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

சமீபத்தில் அதிமுக -உடன் பாஜக கூட்டணி அமைத்த பின்னர் NDA -கூட்டணியின் சார்பாக பாஜக -வின் தேர்தல் வியூக செயலாளர் உள்துறை அமைச்சர் அமித்ஷா “தக்ஷன் விஜய்” (தென்னகத்தில் வெற்றி) என்ற திட்டத்தோடு தமிழகத்தில் களம் இறங்கியுள்ளார். அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களில் அதிமுக -வுக்கு சாத்தியமான சூழல் இல்லை. எனவேதான் மதுரை போன்ற தென் மாவட்டங்களை தேர்வு செய்து அங்கே மத ரீதியான அரசியல் மூலம் வெற்றி வாய்ப்பை பெறலாம் என்ற கணிப்புடன் களம் இறங்கியுள்ளார்.

தவெக -வில் இணைந்த பிரபலங்கள் 

இந்த நிலையில்தான் புது அரசியல்வாதியான விஜய் அவர்களும் தனது முழுநேர அரசியல் வேலையை துவங்கியுள்ளார். 

தவெக -வில் இன்று வால்பாறை முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஸ்ரீதரன், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர் ராஜலட்சுமி, திருவைகுண்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் செல்வின், ஓய்வு பெற்ற முன்னாள் ஐ ஆர் எஸ் அதிகாரி அருண்ராஜ்,  நாகர்கோவிலை சேர்ந்த முன்னாள் மாஜிஸ்திரேட் சுபாஷ், ஜே.பி.ஆர் கல்விக்குழுமத்தை சேர்ந்த மரிய வில்சன் ஆகியோர் இன்று பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் விஜய் முன்னணியில் அக்கட்சியில் இணைந்தனர்.

மேலும் முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி அருண் ராஜூக்கு கொள்கைப் பரப்பு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

 ஐ.ஆர்.எஸ் அதிகாரி அருண் ராஜ் 

கட்சியின் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி உடன் முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி அருண் ராஜ் -ம் கட்சிக்கு ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது, அந்த பந்தத்திலேதான் மாநில கொள்கைப் பரப்பு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

25% வாக்குகள் விஜய் கையில் 

தமிழகத்தில் எப்போதும் 30% வாக்காளர்கள் எந்த கட்சியையும் சேராத வாக்காளர்கள். இவர்களில் 15% -பேர் ஆட்சி மாற்றத்தை விரும்பி அந்தந்த  அறையால் சூழ்நிலைகளை கவனித்து வாக்களிப்பவர்கள். அந்த அந்த கட்சியை சார்ந்தோர் அவர்களுக்கான ஓட்டை பெற்றுவிடுவார், ஆனால் இந்த 15%-பேர் தான் வெற்றியை தீர்மானிப்போராக இருக்கின்றனர்.  இந்த ஓட்டுகள் அனைத்தும்  தவெக-விற்குத்தான். 1972 -ல் எம்.ஜி.ஆர் என்ன தேர்தல் அரசியலை கையிலெடுத்தாரோ அதே முறையைத்தான் தற்போது விஜய் பின்பற்றி வருகிறார் என அதிமுகவிலிருந்து பிரிந்து இன்று தவெக -வில் டாக்டர் ஸ்ரீதரன் கருத்து தெரிவித்திருக்கிறார்.

விஜய் பதிவு 

இந்த உறுப்பினர் சேர்க்கை குறித்து தனது X தளத்தில் பதிவிட்டிருப்பதாவது..

“தமிழக வெற்றிக் கழகத்தில் ஏழாம் கட்டமாக 6 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்”

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com