அன்றைக்கு ராத்திரி நடந்த அதே மாதிரி சம்பவம்,..தாறுமாறாக உளறிய சி.வி.சண்முகம்.! 

அன்றைக்கு ராத்திரி நடந்த அதே மாதிரி சம்பவம்,..தாறுமாறாக உளறிய சி.வி.சண்முகம்.! 
Published on
Updated on
1 min read

அதிமுக ஆட்சியிலிருக்கும் போது சட்டத்துறை அமைச்சராக இருந்தவர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சி.வி.சண்முகம். இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவினார். அவர் தோல்வியை தழுவியதிலிருந்து கட்சியில் அவருக்கு போதிய மதிப்பு இல்லை என்று கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் "ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட வலுவான அதிமுக அணி எனவும் இதனை யாராலும் எந்த சூழ்நிலையிலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்றும் கருவாடு மீனாகலாம் ஆனால் அதிமுகவில் சசிகலா ஒருபொழுதும் அடிப்படை தொண்டராக கூட ஆக முடியாது" எனக் கூறினார். 


ஆனால் இதே சண்முகம் தான் சில ஆண்டுகளுக்கு முன் சசிகலா சின்னம்மா இல்லை எங்கள் அம்மா என்று கூறியிருந்தார்.சசிகலாவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் செய்ததர்மயுத்தத்தை தொடர்ந்து இரவு 11 மணி அளவில்  செய்தியாளர்களை சந்தித்த சண்முகம். பன்னீர் செல்வத்தை துரோகி என்றும், கருங்காலி என்றும் விமர்சித்தார். அதன் பின் பேசிய சசிகலா குறித்து பேசிய அவர் ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டார். எங்க சின்னம்மா என்று கூறியவர், சின்னம்மா இல்லை எங்க அம்மா என்று உணர்ச்சி பூர்வமாக பேசினார். ஆனால் அப்போதும் அவர் குடிகாரன் பேசுவதை போல பேசுவதாக கடும் குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com