ஆற்றில் குதித்த பெண்ணை காப்பாற்றிய மீனவர்கள்...

தற்கொலைக்கு முயன்ற பெண்ணை படகில் விரைந்து காப்பாற்றிய மீனவர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது
ஆற்றில் குதித்த பெண்ணை காப்பாற்றிய மீனவர்கள்...

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரி பகுதியைச் சேர்ந்தவர் துடால நாகலட்சுமி. 40 வயதான இவர் ஜூன் 28-ம் தேதியன்று மதியம், ரயில் பாலத்தில் இருந்து கோதாவரி நதியில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

 இதைப் பார்த்த பொதுமக்கள், ஓடி வந்து அவர் விழுந்த இடத்தை பார்த்து அலறினர். மேலும் நாகலட்சுமி குதித்த ஆற்றில் சில தொலைவுக்கு அப்பால், மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

 உடனே பாலத்தின் மீது இருந்தவர்கள் மீனவர்களை கூக்குரலிட்டு அழைக்க, ஆபத்தை அறிந்த அவர்கள் படகை அதிவேகமாக செலுத்தினர்.

நதியில் விழுந்த பெண் உயிருக்கு போராடும் காட்சி
நதியில் விழுந்த பெண் உயிருக்கு போராடும் காட்சி

நதியில் தத்தளித்துக் கொண்டிருக்கும் பெண்மணியை மீனவர்கள் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். நதியில் விழுந்த பெண், மிதந்து கொண்டிருக்க அவரது மீது படகு கடந்து சென்றது. பின்னர் படகில் இருந்து மீனவர் ஒருவர் நீந்திச் சென்று நாகலட்சுமியை சரியான நேரத்தில் காப்பாற்றினர்.

பின்னர் நாகலட்சுமி காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு காவலர்கள் அறிவுரை வழங்கி உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர்.

நதியில் குதித்து உயிரை மாய்க்க முயன்றவரை மீனவர்கள் அதிரடியாக காப்பாற்றிய இந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு பெண்ணை காப்பாற்றிய மீனவர்களுக்கு பலரும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

தத்தளிக்கும் பெண்ணை மீனவர்கள் காப்பாற்றும் காட்சி
தத்தளிக்கும் பெண்ணை மீனவர்கள் காப்பாற்றும் காட்சி
logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com