கருவில் உள்ள சிசு ஆணா பெண்ணா என 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கும் மோசடி கும்பல் சிக்கியது எப்படி?

கருவியை வயிற்றில் வைத்த 5-வது நிமித்திலேயே என்ன குழந்தை என தெரிவிக்கும் மருத்துவர்கள்
மோசடி செய்த கும்பலை எச்சரித்த மருத்துவ இணை இயக்குநர் சாந்தி
மோசடி செய்த கும்பலை எச்சரித்த மருத்துவ இணை இயக்குநர் சாந்தி
Published on
Updated on
2 min read

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நெற்குந்தி கிராமத்தில் மர்மகும்பல் ஒன்று போலி மருத்துவத்தில் ஈடுபடுவதாய் சுகாதார மற்றும் ஊரக நலத்துறை இயக்குநர் மருத்துவர் சாந்தி என்பவருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து தனது குழுவினருடன் புறப்பட்ட சாந்தி, மர்மகும்பலை நிழல் போல பின்தொடர்ந்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. கருவில் உள்ள குழந்தை ஆணா,பெண்ணா என கண்டறியும் குழு ஒன்று மலைப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாய் அதிகாரிகள் அறிந்தனர்.

அப்போது வீட்டுக்குள் இருந்து வெளியே அழுதவாறே பெண்மணி ஒருவர் சென்று கொண்டிருந்தார். அவரை அழைத்து கேட்டதற்கு, தனக்கு பெண் குழந்தைதான் பிறக்கும் என்றும், ஆண் வாரிசுக்காக காத்திருந்து ஏமாற்றமடைந்து விட்டேன் என்றும் கூறி அழுதவாறே சென்றார்.

இதைத் தொடர்ந்து அதிரடியாக வீட்டுக்குள் சென்ற மருத்துவர் சாந்தி தலைமையிலான குழுவினர் மர்மகும்பலை சுற்றி வளைத்து மடக்கினர். இதில் முக்கிய குற்றவாளியான கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த முருகேசன் இவர்களுடன் சின்னராஜ், லதா ஆகியோரையும் கைது செய்தனர்.

கருக்கலைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட முருகேசன்
கருக்கலைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட முருகேசன்

இவர்களில் முருகேசன் என்பவர் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என சோதனை செய்து ஏற்கெனவே கைதானது குறிப்பிடத்தக்கது. சட்ட விரோத செயலில் ஈடுபட்ட முருகேசன் சில நாட்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்தார்.

ஆனால் மீண்டும் முன்பு செய்த அதே சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்துள்ளார் முருகேசன். கர்ப்பிணிகளைக் கண்டறிந்து, கருவில் இருக்கும் சிசு ஆணா, பெண்ணா என ஐந்தே நிமிடத்தில் கண்டறிந்து விடுவதாக கதை விட்டுள்ளார் முருகேசன்.

இதற்காக பிரத்யேக எந்திரம் ஒன்றையும் கையோடு எடுத்துச் சென்றுள்ளார். சிறிய கணினி போல இருக்கும் அந்த எந்திரத்தில் ஒரு பாகத்தை கர்ப்பிணியின் வயிற்றில் வைத்து சோதனை செய்வது போல நாடகமாடியிருக்கின்றனர்.

இதில் லதா என்ற பெண் மருத்துவர் போல உடையணிந்து இந்த வேலையில் ஈடுபட்டுள்ளார். கருவியை வயிற்றில் வைத்தவுடன் வெள்ளை குறியீடு வந்தால் ஆண் என்றும், கருப்பு குறியீடு வந்தால் பெண் குழந்தை என்றும் கூறியிருக்கின்றனர்.

இந்த சிகிச்சைக்காக ஒவ்வொருவரிடம் இருந்தும் 13 ஆயிரம் ரூபாய் முதல் வசூல் வேட்டையை நடத்தினர். ஒரு வேளை பெண் குழந்தை எனக் கூறி, கர்ப்பிணி தனக்கு இந்த குழந்தை வேண்டாம் என தெரிவித்தால், அதனை கலைக்கும் வேலையிலும் இந்த கும்பல் ஈடுபட்டுள்ளது.

இவ்வாறு 50-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை நடத்தி கருக்கலைப்பில் ஈடுபட்டு வந்தனர் முருகேசன் குழுவினர். சம்பவம் குறித்து மாவட்ட சுகாதாரத்துறைக்கு கிடைத்த தகவலின்பேரில், சாந்தி தலைமையிலான மருத்துவக்குழுவினர் விரைந்து சென்று போலி கும்பலை கைது செய்தனர்.

மேலும் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என சோதனை செய்யும் கருவியையும் பறிமுதல் செய்த போலீசார், முருகேசன் உள்ளிட்டரோரை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

கைது செய்யப்பட்ட முருகேசன், லதா உள்ளிட்டோர்
கைது செய்யப்பட்ட முருகேசன், லதா உள்ளிட்டோர்
கருக்கலைப்பு குழுவை கையும் களவுமாய் பிடித்த மருத்துவ இணை இயக்குநர் சாந்தி
கருக்கலைப்பு குழுவை கையும் களவுமாய் பிடித்த மருத்துவ இணை இயக்குநர் சாந்தி
logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com