நண்பரின் மனம் நொந்துவிடக்கூடாது: முதல்வரின் உத்தரவால் தேமுதிக அதிர்ச்சி!  

நண்பரின் மனம் நொந்துவிடக்கூடாது முதல்வர் மு.க ஸ்டாலின் போட்ட உத்தரவால் தேமுதிக-வினர் அதிர்ந்துபோயுள்ளனர்.  
நண்பரின் மனம் நொந்துவிடக்கூடாது: முதல்வரின் உத்தரவால் தேமுதிக அதிர்ச்சி!   

நண்பரின் மனம் நொந்துவிடக்கூடாது முதல்வர் மு.க ஸ்டாலின் போட்ட உத்தரவால் தேமுதிக-வினர் அதிர்ந்துபோயுள்ளனர்.

நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அனைத்து கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரவில்லை. எனினும் சுதீஷிடமும், விஜயபிரபாகரனிடமும் விஜயகாந்த் குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் கேட்டறிந்தார்.

பின்னர் விஜயகாந்தே ஸ்டாலினுக்கு போன் செய்து வாழ்த்து கூறி மகிழ்ந்தார். இதற்கிடையே மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நண்பர் விஜயகாந்திற்கு உயர்தர சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த நிலையில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அமமுக கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக படுதோல்வி அடைந்தது. இதனால் அக்கட்சியில் இருந்து திமுகவில் சேர பலரும் முன்வந்துள்ளனர். ஆனால் இதனை அறிந்த முதல்வர் மு.க ஸ்டாலின் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில், தனது நண்பரான விஜயகாந்தின் மனம் புண்படக்கூடாது என்பதால் தேமுதிகவை சேர்ந்தவர்களை திமுகவில் சேர்க்ககூடாது என குறிப்பிட்டுள்ளாராம்.

தங்களது கட்சியை வலுசேர்க்க எண்ணும் அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் நண்பரின் மனம் புண்பட்டுவிடக்கூடாது என அதிரடி உத்தரவை பிறப்பித்த முதல்வரின் செயலை விவரம் அறிந்தவர்கள் பாராட்டி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com