இந்த ஆண்டு தமிழ் சினிமாவிற்கு மற்றுமொரு சிறந்த ஆண்டு என்றே கூறலாம். வளர்ச்சியிலும் சரி கவர்ச்சியிலும் சரி ரசிகர்களை முழுக்க முழுக்க திருப்தி அடைய வைத்துவிட்டது என்று பெருமையாக சொல்லிக்கொள்ளும் வகையில் இந்த ஆண்டு நிறைவு பெறுகிறது. பொதுவாக நடிகைகளுக்கு படங்கள் இல்லாவிட்டால் மக்கள் முகத்தை மறந்து விடுவர் பின்பு மார்க்கெட் மண்ணை கவ்விவிடும்.
இப்படி பல நடிகைகள் தமிழ் சினிமாவில் தடம் தெரியாமல் சென்றுவிட்டனர். ஆனால் இன்றைய இணைய வழி வளர்ச்சிக்கு பிறகு இந்த சிக்கலில் இருந்து தற்காலத்து நடிகைகள் தப்பித்து விடுகின்றனர். மக்கள் மனதைவிட்டு நீங்காமல் இருக்க எப்போதும் பேசுபொருளாக இருக்க இணையத்தை ஒரு கருவியாக பயன்படுத்தி விதவிதமாக போட்டோ ஷூட்டுகளை செய்து பல வகையான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ட்ரெண்டிங்கில் இருந்துகொண்டே இருக்கின்றனர். இப்படி இணையத்தில் இடுப்பை காட்டி புகைப்படங்களை பதிவிடுவதின் மூலம் முகம் தெரியாத பெண்களே முன்னணி நாயகியாக மாறும்போது முன்னணி நாயகிகளை பற்றி சொல்லவா வேண்டும். இப்படி இந்த வருடம் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு இணையத்தை தெறிக்கவிட்ட பத்து நாயகிகளின் புகைப்படங்களை தான் இந்த பட்டியலில் பார்க்கப்போறோம்.
1. சமந்தா:
2021ம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு வேற லெவல் கிளாமரில் ரசிகர்களை கிறங்கடித்தவர் நடிகை சமந்தா. சமூக வலைத்தளங்களில் 20.5 மில்லியன் ரசிகர்கள் இவரை பின்தொடர்ந்து வரும் நிலையில் லூயிஸ் வூட்டன் விளம்பரத்திற்காக கிறங்கவைக்கும் இடையழகை காட்டி ஒட்டுமொத்த இணையத்தையும் தெறிக்கவிட்ட சமந்தாவின் ஊ சொல்றியா பாடல் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில், லேட்டஸ்ட்டாக நீச்சல் உடையில் இவர் வெளியிட்ட புகைப்படம் இணையத்தையே தீப்பிடிக்க வைத்துள்ளது.
2. நயன்தாரா:
தமிழ் திரையுலகில் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக ரசிகர்களின் மனங்களை கவர்ந்த கனவுக்கன்னியாக நடிகை நயன்தாரா அசத்தி வருகிறார். இந்த ஆண்டு நெற்றிக்கண், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நயன்தாரா பாலிவுட்டில் ஷாருக்கானின் படத்தில் நடித்து வருகிறார் என்ற செய்தி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது. சமூக வலைதளங்களில் நயன்தாரா இல்லையென்றாலும் அவரின் காதலர் விக்னேஷ் சிவன் ட்விட்டரில் பதிவிடும் புகைப்படங்களே இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது.
3. பூஜா ஹெக்டே:
டோலிவுட், கோலிவுட், பாலிவுட் என அனைத்து இந்திய படங்களிலும் நடித்து பேன் இந்தியா நட்சத்திரமாக உள்ள மெகா பட்ஜெட் ஹீரோயின் பூஜா ஹெக்டே தற்போது தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். புட்டபொம்மா பாடல் மூலம் உலகளவில் ட்ரெண்ட் ஆனா பூஜா ஹெக்டேவை இன்ஸ்டாகிராமில் 16.8 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். எனவே அவர்களை எப்போதும் குதூகலமாக வைக்க ஏகப்பட்ட அல்ட்ரா கிளாமர் போட்டோக்களை அடுக்கி ரசிகர்களை அதிர வைத்து வருகிறார் பூஜா .
4. ரகுல் ப்ரீத் சிங்:
மண் மோகன் சின், சாய சிங்கிற்கு அடுத்து தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமான சிங் என்றால் அது ரகுல் ப்ரீத் சிங் தான். 18.2 மில்லியன் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமை கலக்கி கொண்டிருக்கும் இவர் கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட் என படுபிசியாக நடித்து வருகிறார். தமிழில் ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகி உள்ள சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னமும் அந்த படம் வெளியாகாதது அவரின் ரசிகர்களுக்கு பெரிதும் ஏமாற்றத்தையே அளித்தது. அதனை ஈடு செய்யும் விதமாக பிகினி புகைப்படங்களை களமிறக்கி கலக்கி வருகிறார் ரகுல் ப்ரீத் சிங்.
5. ராஷ்மிகா மந்தனா:
நேஷனல் கிரஷ் என்று ரசிகர்களால் புகழப்பட்டு வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா கார்த்தியின் சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சமீபத்தில் வெளியான புஷ்பா படத்திலும் தனது கவர்ச்சியால் ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளார். 26.3 மில்லியன் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் உலகை கலக்கி வரும் நேஷ்னல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா இணையத்தில் பல புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
6. கீர்த்தி சுரேஷ்:
இந்த ஆண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஒடிடி முதல் தியேட்டர் வரை ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷை இன்ஸ்டாகிராமில் 11.2 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்ந்து வரும் நிலையில் கவர்ச்சி ஏதும் காட்டாமல் வகைவகையான ஆடைகளை அணிந்துகொண்டு அவ்வப்போது சமூக வலைதளங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் வேற லெவலில் டிரெண்டாகி வருகின்றன.
7. ராஷி கன்னா:
7.7 மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள நடிகை ராஷி கன்னா தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து அசத்தி வருகிறார். ஹோம்லி லுக்கில் நடித்து வந்த ராஷி கன்னா நீச்சல் குளத்தில் வெளியிட்ட பிகினி புகைப்படங்களால் அதிகமான ரசிகர்களால் பின் தொடரப்பட்டார். தொடர்ந்து அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார் ராஷி கன்னா.
8.அமலா பால்:
4 மில்லியன் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை கொண்டுள்ள நடிகை அமலா பால் ஆன்மிக சுற்றுலா புகைப்படங்களை அதிகம் வெளியிட்டு வந்தார். சமீபத்தில் துபாய் அரசாங்கத்தால் கோல்டன் விசா வழங்கப்பட்டதை அடுத்து நடு நடுவே கவர்ச்சி புகைப்படங்களையும் பிகினி புகைப்படங்களையும் பதிவிட்டு இன்ஸ்டாகிராமை அதிர வைத்து வருகிறார். தமிழ் சினிமாவில் அதிகம் நடிக்கவில்லை என்றாலும் சமூக வலைதளம் மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார் அமலா பால்.
9. மாளவிகா மோகனன்:
ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான மலையாள நடிகை மாளவிகா மோகனன், விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை ஈர்த்தார். தனுஷின் மாறன் படத்தில் நடித்து வரும் மாளவிகா மோகனன் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார். இவரை இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.
10. தர்ஷா குப்தா:
குக் வித் கோமாளி ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமான நடிகை தர்ஷா குப்தா இந்த ஆண்டு வெளியான ருத்ர தாண்டவம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து சன்னி லியோனின் ஓ மை கோஸ்ட் படத்திலும் தர்ஷா குப்தா நடித்து வருகிறார். இது பத்தாது என்று சமூக வலைதளங்களில் சூப்பர் ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு இளைஞர்களின் இதயத்தில் இடம் பிடிக்க முயற்சித்து வருகிறார் தர்ஷா குப்தா.