இலங்கையில் என்ன நடக்கிறது...விரிவாக அலசும் மாலைமுரசு ரிப்போர்ட்!

இலங்கையில் என்ன நடக்கிறது...விரிவாக அலசும் மாலைமுரசு ரிப்போர்ட்!

இலங்கையில் மீண்டும் பொருளாதாரம் நெருக்கடி அதிகரித்துள்ளது. அதிபர் அலுவலகம் மூடப்பட்டிருக்கிறது. மக்கள் அதிபருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கின்றன. நேற்று இலங்கையின் நடாளுமன்றத்திற்கு சென்ற கோத்தபய ராஜ்பக்சவிற்கு எதிராக (go back kotha) என்று கோஷம் எழுப்பப்பட்டது. இந்த சூழலில் இலங்கையின் அரசியல் சூழல், பொருளாதார நிலை குறித்து இலங்கையின் மூத்த பத்திரிக்கையாளர் பாரதி உடன் நமது மாலை முரசு நேர்க்காணல் நடத்தியது. அதனை தற்பொழுது பார்க்கலாம். 

தமிழ்செல்வி: இலங்கை தற்போது எப்படி உள்ளது சார்? 


பாரதி : இலங்கையின் தற்போதைய நிலைமை மிகவும் மோசமானதாக தான் இருக்கின்றது. அடுத்து வரும் மாதங்களில் இந்த நிலைமை இன்னும் நெருக்கடி மிக்கதாகலாம். அரசாங்கத்திடம் இல்லாததால் எரிபொருட்களை கொள்முதல் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டு இருக்கின்றது. எரி வாயும் இல்லை என்ற நிலைமையில் சமையல் செய்வதிலும் மக்கள் நெருக்கடிகளை எதிர் கொண்டு உள்ளார்கள். எரிபொருள் இல்லாததால் போக்குவரத்துக்கள் 95 சவீதமானவை முடங்கிப் போய் உள்ளன. இதனால் பாடசாலைகள் அரசாங்க அலுவலகங்களுக்கு கடந்த சில வாரங்களாகவே விடுமுறை வழங்கப்பட்டிருக்கின்றது. அத்தியவசிய சேவைகளான மருத்துவ சேவைகள் மட்டும் தான் இயங்கி வருகின்றன. இதனால் நாடு செயல் இழந்த நிலைமையில் காணப்படுகின்றது. வர்த்தக நடவடிக்கைகளும் பெரும் அளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்கின்றது. போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்த முடியாமல் விவசாயிகள் திண்டாடுகின்றார்கள். மக்களுடைய உணவுப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் உள்ளிட்டவை எட்ட முடியாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளன. தொடர்ச்சியான மின்சார தடை, போக்குவரத்து பிரச்சனை  காரணமாக பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் நகர பகுதியில் உள்ளவர்கள் பெரிதும் சிரமங்களுக்கு உள்ளாகின்றார்கள். இவைகளில் பெருந்தொகையான மக்கள் வேலை வாய்ப்புகள் இழந்திருக்கின்றார்கள். உணவகங்கள் மூடப்பட்ட சிறிய தொழிற்சாலைகள் பல செயல்பட முடியாத நிலைமையில் இருப்பதும் இதற்கு காரணம். இலங்கையை பொறுத்தவரையில் கடுமையான போர் நடைபெற்ற பகுதியில் கூட இல்லாத ஒரு பெரிய நெருக்கடி இப்போது ஏற்பட்டு இருக்கின்றது. இதிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகள் கூட குறைவாகவே காணப்படுகின்றது.

தமிழ்செல்வி: எரிபொருளும் இல்லை, பொது போக்குவரத்தும் செய்ய முடியாத நிலை உள்ளது, இதை மக்கள் எவ்வாறு எதிர்கொள்கின்றனர்?


பாரதி : போக்குவரத்தில் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடிகள் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. பேருந்து சேவைகள் முடியாத நிலைமையில் ரயில் சேவைகளை சில நாட்கள் மக்கள் நம்பி இருந்தார்கள். இப்போது ரயில் சேவைகள் கூட பெருமளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதனால் மக்கள் பெரும் அளவுக்கு நெருக்கடியை சந்தித்தவர்களாகவே காணப்படுகின்றார்கள். தினசரி வீதி போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் காண முடிகின்றது.


தமிழ்செல்வி: மக்கள் போராட்டங்களால் பிரதமர் பதவி விலகியதை போல, ஜனாதிபதி விலகாதது ஏன்? அந்த கோரிக்கையை மக்கள் தற்போது எழுப்ப தொடங்கிவிட்டார்களா?


பாரதி: ஜனாதிபதி கோத்தபய ராஜ்பக்ச பதவி விலக வேண்டும் எனக் கூறிய மக்கள் போராட்டத்தை ஆரம்பித்தனர். ஆனால் அவர்தான் பதவி விலகாமல் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சேவை பதவி விலகச் செய்தார். இலங்கை அரசியலமைப்பின் படி ஜனாதிபதி ஒருவர் பதவி விலகினால் அவருடைய அந்த பதவி காலம் வரை பிரதமரே ஜனாதிபதியாக பதவி வகிக்க வேண்டும். அதனை விட ஜனாதிபதியிடமே நிறைவேற்று அதிகாரங்கள் இருக்கின்றது. இதன் காரணமாகத்தான் பதவி விலகுவதை தத்ரூபமாக தவிர்த்துக் கொண்டார். இருந்தபோதிலும் கூட கோத்தபய பதவி விலக வேண்டும் என்ற கோஷம் தொடர்ந்தும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றது அதற்கான போராட்டமும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றது. ஆனால்  அவரை பொறுத்தவரையில் அவருக்கு இன்னும் இரண்டரை வருட காலம் பதவி இருக்கின்றது அந்த காலத்தை பூர்த்தி செய்த பின்னரே தான் பதவியிலிருந்து விலகப் போவதாக அவர் அறிவித்திருக்கின்றார். அதுவரை தோல்வியடைந்த ஒரு ஜனாதிபதியாக தான் பதவி விலகப் போவதில்லை என்பதும் அவரது அறிவிப்பாக இருக்கின்றது. இந்த பின்னணியில் அவரை பதவி விலகும் மாறுக் கூறும் போராட்டங்களை எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து முன்னெடுப்பதற்கான ஒரு சூழ்நிலை உருவாகி வருவதாகவே தெரிகின்றது.

தமிழ்செல்வி: இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் உணவுப் பொருள்களும், எரிப்பொருட்களும் எந்த அளவிற்கு பயனுள்ளதாக உள்ளது?


பாரதி : உண்மையில் இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இந்த நேரத்தில் இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட உதவிகள் அனைத்தும் பெரும் அளவுக்கு மக்கள் உயிர் வாழ்வதற்கு உதவி இருக்கின்றது. அதிகரித்துள்ள விலைவாசிகளும், பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடும் மக்கள் ஒரு நேரம் சாப்பிடுவதற்கு கூட தவிக்கும் ஒரு நிலைமையை உருவாக்கி இருக்கின்றது. இந்த நிலைமையில் இந்தியாவின் உதவிகள் நாட்டு மக்கள் அனைவராலுமே வரவேற்கப்பட்டனர். அதனால் அனைவரும் பயன் பெற்றுள்ளார்கள் என்பது தான் உண்மை


தமிழ்செல்வி: இலங்கையின் தற்போதைய நிலமையை இந்தியா எவ்வாறு பார்க்கின்றது?


பாரதி : இலங்கையில் தற்போது உருவாகியிருக்கும் நிலைமையை எந்த வகையில் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற வகையிலே இந்தியா பார்க்கின்றது. குறிப்பாக கடந்த காலங்களில் இலங்கையில் சீனாவின் பிரசன்னம் அதிகமாக இருந்தது. இலங்கைக்கு பெருமளவு கடனை கொடுத்து இலங்கையை கடனில் சிக்க வைத்த முக்கிய நாடாக சீனா தான் இருந்தது. ஆனால் தற்போதைய நெருக்கடியான காலகட்டத்தில் உதவிகள் என்ற வகையில் சீனாவிடம் இருந்து பெரும் அளவுக்கு இலங்கைக்கு எதுவும் கிடைக்கவில்லை. சீனாவினுடைய கொள்கை நிலைப்பாடு அதுவாக இருக்கலாம். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரையில் அண்டை நாடு என்ற வாயில் இலங்கையை பாதுகாக்க பெருமளவுக்கு கடன் உதவிகளை வழங்கியிருக்கின்றது. தமிழக மக்களும் உணவுப் பொருட்களை தாராளமாக வழங்கி இருக்கின்றார்கள். இந்த நிலைமையில் இந்தியாவிடம் இருந்து இலங்கை அதிகளவுக்கு உதவிகளை எதிர்பார்க்கின்றது என்பதும் தெளிவாகத் தெரிகின்றது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இலங்கையில் தன்னுடைய நலன்களை பேணும் வகையில் சில நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான அழுத்தங்களை இந்தியா கொடுப்பதாக கருதப்படுகின்றது. உதாரணமாக அதானி நிறுவனத்தின் ஆதரவுடன் மன்னாரிலும் பூநகரிலும் கொழும்பு துறைமுக மேற்கு முனையத்திலும் தமது செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் இந்தியா இலங்கைக்கு அழுத்தம் கொடுத்ததாக ஒரு தகவல் உள்ளது. அதாவது தற்போதைய நிலைமைகளை பயன்படுத்திக் கொண்டு இலங்கை மீது இன்றைய அழுத்தம் கொடுக்கின்றது என்று ஒரு கருத்து இதன் மூலம் சிங்கள மக்கள் மத்தியில் உருவாகி இருப்பதை அறிய முடிகிறது.


தமிழ்செல்வி: உலக வங்கியும், ஐ,நா வும் தரும் இலங்கைக்கான ஆதரவு என்பது எந்த அடிப்படியில் உள்ளது?


பாரதி : உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் என்பன இலங்கைக்கு உதவிகளை வழங்கும் போது பல்வேறு கடுமையான நிபந்தனைகளை விதிக்கின்றன. இந்த நிபந்தனைகள் இலங்கையை பொறுத்தவரையில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. குறிப்பாக அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்க வேண்டும் வரிகளை அதிகரிக்க வேண்டும் மக்களுக்கு வழங்கக்கூடிய மானியங்களை நிறுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகள் இந்த நிறுவனங்களால் முன்வைக்கப்படுகின்றது. இந்தக் கோரிக்கைகளை ஏற்கும் பட்சத்திலேயே கடன் வழங்குவதற்கான உறுதியை அவர்கள் வழங்குவார்கள். அரசாங்கத்தை பொருத்தவரையில் இந்த கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வது மக்கள் மத்தியில் எதிர்ப்பை அதிகரிக்கிறது. இந்த நிலைமையில் அரசாங்கத்திற்கும் உலக வாங்கிய சர்வதேச நாணய நீதிமன்றத்தின் இடையிலான பேச்சு வார்த்தைகள் தற்போது இடம் பெற்று வருகின்றன. இவற்றின் உதவிகள் தவிர்க்க முடியாதவை என்பதால் அவற்றினுடைய நிபந்தனைகளை ஏற்க வேண்டிய நிர்ப்பந்தம் இளைஞர் சங்கத்திற்கு ஏற்படலாம் இவ்வாறு கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com