தப்பியோடிய கோத்தபய....இலங்கையின் புதிய அதிபர் யார்?

தப்பியோடிய கோத்தபய....இலங்கையின் புதிய அதிபர் யார்?
Published on
Updated on
1 min read

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் - பொருளாதார நெருக்கடிகள் காரணமாக கோத்தபய ராஜபக்சே தனது அதிபர் மாளிகையை விட்டுத் தப்பியோடினார், தற்போது அவர் பதவி விலக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே இலங்கையின் இடைக்கால அதிபராக தற்போதைய சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன பதவியேற்பார் என தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இன்று பிற்பகல் இடம்பெற்ற அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

இந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஜேவிபி கட்சியின் தலைவர் அநுர குமார திஸநாயக்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com