புதிய யூடியூப் தலைமை நிர்வாகியான நீல் மோகன்..... யார் இந்த நீல் மோகன்....

புதிய யூடியூப் தலைமை நிர்வாகியான நீல் மோகன்..... யார் இந்த நீல் மோகன்....

யூடியூபின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய சூசன் வோஜ்சிக்கிக்கு பதிலாக புதிய தலைமை நிர்வாகியாக பதவியேற்றுள்ளார் நீல் மோகன்.  ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு சூசன் வோஜ்சிக்கி இந்த பதவியில் இருந்து விலகிய நிலையில் அவரது ராஜினாமா கடிதத்தை நிர்வாகத்திடம் அளித்துள்ளார். 

1.  YouTube இன் புதிய CEO நீல் மோகன் அவரது மனைவி ஹேமா சரிமுடன் சான் பிரான்சிஸ்கோவில் வசித்து வருகிறார். இவர் இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலத்தின் லக்னோவில் பிறந்தவராவார்.
 
2.  நீல் மோகன் அவரது தொழில் வாழ்க்கையை Glorified Technical Support என்ற கம்பெனி மூலம் தொடங்கினார்.  அப்போது அவரது ஆண்டு வருமானம் 60,000 டாலராகும்.  அதன் பிறகு, 2008 இல் கூகுளால் வாங்கப்பட்ட DoubleClick இல் சேர்ந்தார்.  அன்றிலிருந்து நீல் மோகன் கூகுள் நிறுவனத்தின் ஒரு அங்கமாகிவிட்டார்.

3.  நீல் மோகன் 1996 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார். 
 
4.  2005 இல், அவர் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் அவரது எம்பிஏ பட்டப்படிப்பை முடித்தார். 
 
5.  மோகன் 2015 இல் யூடியூப்பில் தலைமை தயாரிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். யூடியூப்பில் தலைமை தயாரிப்பு அதிகாரியாக குறும்படங்கள், இசை ஆகியவைகளில் அதிக கவனம் செலுத்தினார். 
 
6.  நீல் மோகனுக்கு ட்விட்டரில் இருந்தும் வேலை வாய்ப்பு கிடைத்ததை அறிந்து கூகுள் நிறுவனம் அவருக்கு போனஸ் அறிவித்தது.  

7.  யூடியூப் தவிர,  ஆடை வடிவமைப்பு மற்றும் பேஷன் நிறுவனமான ஸ்டிட்ச் ஃபிக்ஸ் நிறுவனத்தின் போர்டு இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார் நீல் மோகன். 

8.  இவர் 23&Me என்ற பயோடெக்னாலஜி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவிலும் இடம் பெற்றுள்ளார்.

9.  நீல் மோகன் யூடியூப்பின் CEO ஆக்கப்பட்டதில் அவரது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.  அவர் ட்விட்டரில், 'நன்றி சூசன் வோஜ்சிக்கி, பல ஆண்டுகளாக உங்களுடன் பணியாற்றியது மிகவும் அருமையாக இருந்தது.  படைப்பாளிகளுக்கும் பார்வையாளர்களுக்கும் யூடியூப்பை ஒரு அசாதாரண தளமாக மாற்றியுள்ளீர்கள்.  இந்த முக்கியமான பணியைத் தொடர நான் உற்சாகமாக இருக்கிறேன். ” என பதிவிட்டுள்ளார்.

10.  யூடியூப்பை லாபகரமாக்குவதுதான் நீலின் முதல் இலக்கு என அவர் அறிவித்துள்ளார்.  இந்த ஆண்டு கூகுள் நிறுவனமும் ஏழு பில்லியன் டாலர்களை சம்பாதிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. 

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com