“ஒத்த ரூபா கூட இல்ல.. இதுல சிசிடிவி கேமரா வேற..” திருட சென்ற வீட்டில் காசை வீசிச் சென்ற திருடன்...

திருடச் சென்ற வீட்டில் பணம் கிடைக்காததால் ஆத்திரமடைந்த திருடன், 20 ரூபாயை வைத்து விட்டு சென்ற சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியிருக்கிறது. சிசிடிவி கேமராவின் முன்பு திருடன் சொன்ன தகவல் என்ன?
“ஒத்த ரூபா கூட இல்ல.. இதுல
சிசிடிவி கேமரா வேற..” திருட சென்ற வீட்டில் காசை வீசிச் சென்ற திருடன்...
Published on
Updated on
1 min read

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் மகேஷ்வரம் நகரில் உள்ள ஒரு வீட்டில் 18-ம் தேதி இரவில் கொள்ளை சம்பவம் அரங்கேறியதாக தகவல் வெளியானது.

வீட்டின் உரிமையாளர்கள் வெளியூருக்கு சென்றதை வேவு பார்த்த திருடன், இரவு 7 மணிக்கே பூட்டை உடைத்து அதிரடியாக நுழைந்தான்.

பீரோ முதல் அரிசி டப்பா வரை அனைத்தையும் உருட்டிய திருடனுக்கு ஒரு ரூபாய் கூட சிக்கவில்லை. சரி பணம்தான் கிடைக்கவில்லை என்றால், தங்கம், வெள்ளி, கவரிங் நகைகள் கூட கிடைக்காததால் மிகுந்த ஏமாற்றமடைந்தான்.

இதையடுத்து சிசிடிவி கேமரா இருப்பதை கவனித்த திருடன் சைகை மூலம் வீட்டின் உரிமையாளரிடம் தகவலொன்றை தெரிவித்தான்.

வீட்டில் ஒரு ரூபாய் கூட இல்லை, இதுவெல்லாம ஒரு வீடா? இந்த லட்சணத்தல் சிசிடிவி கேமரா ஒரு கேடு? என அலட்சியத்துடன் பேசியவர், பிரிட்ஜை திறந்து தண்ணீர் பாட்டிலை மட்டும் எடுத்துக் கொண்டான்.

அப்போது மீண்டும் திரும்பி வந்த திருடன், சிசிடிவி கேமராவை பார்த்தவாறு, இந்தா பாத்துக்கோ, உன் வீட்டில் இருந்து எடுத்த தண்ணீர் பாட்டிலுக்கு 20 ரூபாயை வச்சிட்டேன், எடுத்துக்கோ.. உன் வீட்டுக்கு வந்து எந்த பயனும் இல்ல என சைகையால் கூறி விட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றான்.

திருடச் சென்ற இடத்தில் பணம் எதுவும் கிடைக்காததால் விரக்தியடைந்த திருடன், வீட்டின் உரிமையாளருக்கே பணத்தை வீசிச் சென்றது, கரடியே காரி துப்பிய மொமண்ட்டாக இருப்பதாக கேலிக்குள்ளாகியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com