அதனை நம்பி வந்தவர்களுக்கு நீங்கள் செய்தது என்ன? நடந்தது என்ன? உங்கள் பக்கம் இருக்கும் பத்திரிக்கையாளர், எழுத்தாளர், பெண்ணியப் போராளி, ஆவணபட இயக்குனர், ஈழவிடுதலைக்காக குரல் கொடுப்பவர் என்கிற அடையாளங்களைக் கொண்ட ஒரு சிலரை அங்கே வர வைத்திருந்தீர்கள். இவர்களும் உடன் சேர்ந்து நீங்களும் எப்படி எல்லாம் என் அம்மாவைக் கேள்வி கேட்டீர்கள். கிராமத்தில் இருந்து வந்த பெண் இப்படியெல்லாம் எப்படி உடை அணியலாம், மூன்றாம் மனிதரான தியாகுவை ( தாத்தாவை) எப்படி அப்பா என்று அழைக்கலாம் என்றெல்லாம் கேட்டீர்கள். அதில் ஒரு பத்திரிக்கையாளர் என் அம்மாவுக்கு தெரியாமல் போனில் ஒளிப்பதிவு செய்து , அதை நீங்கள் வலைதளத்தில் உலவவிட்டீர்கள்… இது எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம்.