ஓ.பி.எஸ், ரவீந்திரநாத் விருப்பம்: சசிகலாவிடம் சொன்ன சுஜாதா.... முக்கிய நிர்வாகிகள் அதிர்ச்சி
அதிமுக-வில் சசிகலா வருகை தருவதற்கு ஓ.பன்னீர்செல்வமும், அவரது மகனும் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக கட்சிக்குள் இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் இடையே மனக்கசப்பு இருந்து வருவதாக கூறப்படுகிறது. இது பல இடங்களில் வெளிப்படையாகவும் தெரிந்து வருகிறது. இந்த நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படும் சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்ததும், அரசியலில் தீவிரமாக ஈடுபடுவேன் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
ஆனால் அண்மையில் மீண்டும் அரசியலில் இருந்து விலகப்போவதாக அறிவித்த அவர் தற்போது மீண்டும் அரசியலுக்கு வருவேன் எனகூறியிருப்பது அவரது ஆதரவாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதை நிரூபிக்கும் வகையில் அவ்வபோது தொண்டர்களுடன் பேசிய ஆடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில் நேற்று சசிகலாவிடம் மதுரை அதிமுக நிர்வாகி என கூறப்படும் சுஜாதா என்பவர் பேசிய நிலையில், கட்சியில் சசிகலாவை சேர்க்க ஓ..பி.எஸ்-சும் அவரது மகனும் ஆதரவு தெரிவிப்பதாக கூறியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் கோஷ்டி மோதல் நிலவும் நிலையில் இந்த ஆடியோ பரபரப்பை கிளப்பி உள்ளது.
கட்சியில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாததால் ஓபிஎஸ் இப்படி சசிகலாவிற்கு ஆதரவாக செயல்படுகிறா என்றும் இணையத்தில் பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.