வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி - சி 54 வகை ராக்கெட்...!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி - சி 54 வகை ராக்கெட்...!
Published on
Updated on
1 min read

XL அளவு வகை ராக்கெட்டாக உள்ள பிஎஸ்எல்வி - சி 54 ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவு தளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது...

14 மாடி அளவு உயரம்

ராக்கெட்டுகளில் XL அளவு வகை ராக்கெட் ஆக உள்ள PSLV - C 54 கிட்டத்தட்ட 14 மாடி அளவு உயரம் கொண்டது. 321 டன் உந்துவிசையுடன் பூமியிலிருந்து கிளம்பும் இந்த பிரம்மாண்டம், தன்னுள்ளாக 9 செயற்கைக்கோள்களை எடுத்துக் கொண்டு 740 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புவி சுற்றுவட்ட பாதையில் அவற்றை நிலை நிறுத்தப் போகிறது.

பி.எஸ்.எல்.வி-யின் 56வது பயணம்

அதன்படி,போலார் சேட்டிலைட் லாஞ்சிங் வெகிக்கள் என அழைக்கப்படும் PSLV வகை ராக்கெட்டுகள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ராக்கெட்டாகும். மிகவும் நம்பகத் தன்மையான ராக்கெட் ஆக அறியப்படும் பி.எஸ்.எல்.வி வகை ராக்கெட்டின் 56 ஆவது பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

நேனோ வகை செயற்கை கோள்கள்

மேலும், புவியில் இருந்து ஏவப்பட்ட உடனேயே  அண்டார்டிகா கண்டத்தை நோக்கியே விண்வெளிக்கு பயணம் செய்யும் இந்த வகை ராக்கெட்டுகள் மிகவும் துல்லியமாக செயற்கைக்கோள்களை நிலை நிறுத்த வல்லவை. அதன்படி, இதன் உள்ளாக மொத்தமாக ஒன்பது  செயற்கைக்கோள்கள்  வைத்து ஏவப்பட உள்ளது. அதில் 8 செயற்கை கோள்கள் நேனோ வகையை சேர்ந்த கோள்களாக உள்ளன.

பூட்டான் - இந்தியா கூட்டு தயாரிப்பு

முதலாவதாக எர்த் அப்சர்வேஷன் வகை செயற்கைக்கோளான ஓஷன் ஷர்ட் 3 மிகவும் முக்கியமான செயற்கைக்கோளாக உள்ளது. சுமார் ஒரு காரின் அளவான 1117 கிலோ எடை கொண்ட இந்த ராக்கெட் இந்திய கடற்பரப்பை கண்காணிப்பதற்காக விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது.

மேலும், பூட்டான் - இந்தியா நாட்டின் கூட்டு தயாரிப்பில் உருவாக்கியுள்ள ins - 2B மற்றும் ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த எட்டு நேனோ செயற்கை கோள்களும் நாளை விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளன.

இந்நிலையில், மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுடன் இருந்த XL அளவு வகை ராக்கெட்டாக உள்ள பிஎஸ்எல்வி - சி 54 ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவு தளத்திலிருந்து இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இது இஸ்ரோவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி ஆகும். முன்னதாக, கடந்த நவம்பர் 18 ஆம் தேதி ”விக்ரம் எஸ்” விண்ணில் ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com