இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: மாவட்டம் வாரியாக உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை இதோ...!

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: மாவட்டம் வாரியாக உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை இதோ...!

தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார்.

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி:

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த நவம்பர் 9 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் போன்ற பணிகளுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு டிசம்பர் 8 ஆம் தேதி வரை திருத்தப்பணிகள் நடைபெற்றன.  அந்த வகையில் வாக்காளர் பட்டியலில் திருத்தப்பணிகளுக்காக, அதாவது பெயர் சேர்க்க 10.54 லட்சம் விண்ணப்பங்களும், திருத்தங்கள் மேற்கொள்ள 2.15 லட்சம் விண்ணப்பங்களும்  பெறப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டன.

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு:

இந்நிலையில்  தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று வெளியிட்டுள்ளார். அந்த பட்டியலில் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை எவ்வளவு என்பதை இந்த செய்துக்குறிப்பில் பார்க்கலாம்...

திருவள்ளூர் :

அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில்  16,90,617  ஆண்களும் 17,30,146 பெண்களும் வாக்காளர்களும், 768 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 34,21,531 வாக்காளர்கள் உள்ளன.

சென்னை: 

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில்  19,09,512  ஆண்களும் 19,71,653 பெண்களும் வாக்காளர்களும், 1,112 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 38,82,277 வாக்காளர்கள் உள்ளன.

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில்  13,19,183 ஆண்களும் 13,41,888 பெண்களும் வாக்காளர்களும், 445 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 26,61,516 வாக்காளர்கள் உள்ளன.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில்  6,51,480 ஆண்களும் 6,86,994 பெண்களும் வாக்காளர்களும், 180 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 13,38,654 வாக்காளர்கள் உள்ளன.

இராணிப்பேட்டை:

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில்  5,01,820  ஆண்களும் 5,29,591 பெண்களும் வாக்காளர்களும், 86 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 10,31,497 வாக்காளர்கள் உள்ளன.

வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில்  6,16,830  ஆண்களும் 6,57,479 பெண்களும் வாக்காளர்களும், 157 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 12,74,466 வாக்காளர்கள் உள்ளன.

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில்  4,78,800  ஆண்களும் 4,95,890 பெண்களும் வாக்காளர்களும், 129 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 9,74,819 வாக்காளர்கள் உள்ளன.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில்  8,02,803  ஆண்களும் 7,95,712 பெண்களும் வாக்காளர்களும், 291 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 15,98,806 வாக்காளர்கள் உள்ளன.

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில்  6,25,651  ஆண்களும் 6,10,692 பெண்களும் வாக்காளர்களும், 163 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 12,36,506 வாக்காளர்கள் உள்ளன.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில்  10,09,411 ஆண்களும் 10,50,180 பெண்களும் வாக்காளர்களும், 115 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 20,59,706 வாக்காளர்கள் உள்ளன.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில்  8,34,394  ஆண்களும் 8,55,708 பெண்களும் வாக்காளர்களும், 213 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 16,90,315 வாக்காளர்கள் உள்ளன.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில்  5,58,079  ஆண்களும் 5,56,103 பெண்களும் வாக்காளர்களும், 209 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 11,14,391 வாக்காளர்கள் உள்ளன.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில்  14,73,024  ஆண்களும் 14,87,294 பெண்களும் வாக்காளர்களும், 275 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 29,60,593 வாக்காளர்கள் உள்ளன.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில்  6,95,695  ஆண்களும் 7,39,311 பெண்களும் வாக்காளர்களும், 192 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 14,35,198 வாக்காளர்கள் உள்ளன.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில்  9,44,659  ஆண்களும் 9,99,105 பெண்களும் வாக்காளர்களும், 148 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 19,43,912 வாக்காளர்கள் உள்ளன.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில்  11,44,309  ஆண்களும் 11,81,843 பெண்களும் வாக்காளர்களும், 334 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 23,26,486 வாக்காளர்கள் உள்ளன.


நீலகிரி:

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில்  2,78,708  ஆண்களும் 3,01,783 பெண்களும் வாக்காளர்களும், 16 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 5,80,507 வாக்காளர்கள் உள்ளன.

கோயம்புத்தூர்:

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில்  14,98,721  ஆண்களும் 15,51,421 பெண்களும் வாக்காளர்களும், 558 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 30,50,700 வாக்காளர்கள் உள்ளன.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில்  9,16,285  ஆண்களும் 9,68,393 பெண்களும் வாக்காளர்களும், 214 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 18,84,892 வாக்காளர்கள் உள்ளன.

கரூர்:

கரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில்  4,30,275  ஆண்களும் 4,63,976 பெண்களும் வாக்காளர்களும், 94 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 8,94,345 வாக்காளர்கள் உள்ளன.

திருச்சிராப்பள்ளி:

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில்  11,20,158  ஆண்களும் 11,89,933 பெண்களும் வாக்காளர்களும், 322 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 23,10,413 வாக்காளர்கள் உள்ளன.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 2 தொகுதிகளில்  2,82,021  ஆண்களும் 2,93,832 பெண்களும் வாக்காளர்களும், 10 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 5,75,863 வாக்காளர்கள் உள்ளன. 

இதேபோன்று தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களுக்கும் மாவட்ட வாரியாக ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களின் வாக்காளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com