பருப்பு-எண்ணெய் வகைகள் விலை கடும் உயர்வு… இல்லத்தரசிகள் அதிர்ச்சி

வரத்து குறைவால் பருப்பு-எண்ணெய் வகைகள் விலை உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பருப்பு-எண்ணெய் வகைகள் விலை கடும் உயர்வு… இல்லத்தரசிகள் அதிர்ச்சி
Published on
Updated on
1 min read

வரத்து குறைவால் பருப்பு-எண்ணெய் வகைகள் விலை உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கொரோனா தாக்கம் அத்தியாவசிய பொருட்கள் மீதான விலையிலும் எதிரொலித்து தான் வருகிறது. அந்தவகையில் காய்கறி போல பருப்பு மற்றும் எண்ணெய் வகைகளின் விலையும் உயர்ந்துள்ளது. இதுகுறித்து தெரிவித்துள்ள சென்னை கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட் வியாபாரிகள், கொரோனாவால் வியாபாரம் மந்தமடைந்துள்ளதாகவும், விவசாயிகளும், வியாபாரிகளும் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும் கூறினர்.

மேலும், வரத்து குறைவு ஒருபுறம் என்றால், தேவை காரணமாக இன்னொரு புறம் விலை உயர்வு ஏற்பட்டு விடுகிறது. அந்தவகையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே எண்ணெய் மற்றும் பருப்பு வகைகள் விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது. பருப்பு வகைகளின் விலை ரூ.20 முதல் ரூ.30 வரை விலை உயர்ந்திருக்கிறது. எண்ணெய் வகைகளின் விலையிலும் ரூ.30 உயர்வு ஏற்பட்டு உள்ளது. நறுமண பொருட்களின் விலையும் உயர்ந்திருக்கிறது. குறிப்பாக ஒரு கிலோ கசகசா ரூ.1,100-ல் இருந்து ரூ.1,600 ஆக விலை உயர்ந்திருக்கிறது. மிளகு ரூ.400-ல் இருந்து ரூ.500 ஆக அதிகரித்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

எனினும் சில பொருட்களின் விலை குறைந்துள்ளது. அந்தவகையில் ரூ.1,800 வரை விற்பனையான ஒரு கிலோ ஏலக்காய் தற்போது ரூ.1,350-க்கு விற்பனை ஆகிறது. ஒரு லிட்டர் பாமாயில் விலை ரூ.140-ல் இருந்து ரூ.120 ஆக குறைந்துள்ளது. கொரோனா தாக்கம் குறைந்து வருவதால், இனி வரும் நாட்களில் எண்ணெய், பருப்பு பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com