ரெளடி திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவம்: சர்ச்சைகளையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.

இரவோடு,இரவாக அவசர,அவசரமாக பிரேத பரிசோதனை செய்யப்பட்ட ரெளடி திருவேங்கடத்தின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லாமல், மூலக்கொத்தளம் இடுகாட்டில் அடக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரெளடி திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவம்: சர்ச்சைகளையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.
Published on
Updated on
1 min read

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி சென்னையில், ரெளடிகளால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 11பேர் சரணடைந்ததை அடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர்களை 5நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்த நிலையில் கொலை வழக்கில் கைதாகி கஸ்டடியில் இருந்த ரெளடி திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை கேட்கப்பட்டு வரும் நிலையில், ரெளடி திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவம் பல்வேறு சர்ச்சைகளையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.

இந்நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த திருவேங்கடத்தின் உடல், இரவோடு, இரவாக மாதவரம் மாஜிஸ்திரேட் தீபா முன்னிலையில் அவசர அவசரமாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து திருவேங்கடத்தின் உடல் அவரது தந்தை கண்ணனிடம் ஒப்படைக்கப்பட்டது.

உடலைப் பெற்றுக் கொண்ட உறவினர்கள் குன்றத்தூரில் உள்ள திருவேங்கடத்தின் வீட்டிற்கு கொண்டு செல்லாமல் மூல கொத்தளம் இடுகாட்டிலேயே இறுதி சடங்குகளை செய்ய ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனிடையே ரெளடிகளால் கொல்லப்பட்ட ஆம்ஸ்ட்ராங் -ன் மனைவி பொற்கொடி ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் ஆம்ஸ்ட்ராங்க் கொலையில் சிபிஐ விசாரணை கேட்டு மனு அளிக்கவுள்ளதா

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com