நில அபகரிப்பு நடப்பது  போல அதிமுகவில் அரசியல் அபகரிப்பு நடக்கிறது - மருது அழகுராஜ்

நில அபகரிப்பு நடப்பது  போல அதிமுகவில் அரசியல் அபகரிப்பு நடக்கிறது எனஅதிமுக செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
நில அபகரிப்பு நடப்பது  போல அதிமுகவில் அரசியல் அபகரிப்பு நடக்கிறது -  மருது அழகுராஜ்
Published on
Updated on
2 min read

அதிமுக-வில் இரட்டை தலைமை விவாதம் தொடர்ந்து நீடித்து வருகிறது..  இது குறித்து கடந்த ஜூன் 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் கலவரமாகவே முடிந்தது..

சமீபத்தில் அதிமுக அதிகாரபூர்வ  நாளேடான "நமது அம்மா" நாளிதழ் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகிய, அதிமுக செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், சில தினங்களுக்கு முன் நமது அம்மா ஆசிரியர் பொறுப்பில் இருந்து நான் விடுவித்து கொண்டேன், ஓபிஎஸ் இபிஎஸ் இருவரும் அதிமுகவை நன்றாக எடுத்து செல்வார்கள் என்று நம்பி இருந்தேன் ஆனால் இன்று பிளவு ஏற்பட்டு எங்கள் நம்பிக்கை பொய்த்தது.

இரட்டை தலைமையை மக்கள், தொண்டர்கள் என அனைவரும் ஏற்று கொண்டார்கள்.4 ஆண்டு ஆச்சியின் போது தேர்தல்களில் நல்ல வெற்றியை பெற்றார்கள். இரட்டை தலைமையில் கட்சியில் எந்த பிரச்சனையும் இல்லாமல் தான் இருந்தது.

உட்கட்சி தேர்தல்  அறிவிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகிகள் வரை தேர்தல் நடைபெற்றது.

ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என இருவருக்கும் ஒரே படிவம் வழங்கப்பட்டு பதவிகள் தேர்வு செய்யப்பட்டதை கண்டு நாங்கள் எல்லாம் இவ்வளவு  ஒற்றுமையாக இருக்கிறார்களே என்று மெய் சிலிர்த்து போனோம்.

கடந்த 23 ம் தேதி நடந்த பொது குழுவுக்கு அனைத்து  தீர்மானங்களையும் இறுதி செய்து நான் தான் இருவருக்கும் அனுப்பி வைத்தேன். அதை அத்தனையும் நிராகரிப்பதாக இபிஎஸ் தரப்பில் அறிவித்தார்களே, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற தீர்மானமும் அதில் இருந்தது அதையும் அவர்கள் நிராகரிக்கிறார்களா என்று கேள்வி எழுப்பினார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்த  போது நடந்தது போல், இந்த முறை பொதுக்குழு நடக்கவே இல்லை பொதுக்குழுவிற்கு பொதுக்குழு உறுப்பினர்களே வரவில்லை ஆட்களை எல்லாம் வெளியில் இருந்து திட்டம் தீட்டி அழைத்து வந்திருந்தார்கள் என்று குற்றம் சாட்டினார்.

 ஓ பன்னீர்செல்வம் ,வைத்தியலிங்கம் உள்ளிட்டவர்கள் பொது குழுவுக்கு உள்ளே வரும் போது நா கூசும் வகையில் அருவருக்க தக்க வகையில் வெளியே போ என்று பன்னீர்செல்வத்தை கொச்சை வார்த்தைகளால் திட்டினார்கள்.

ஓ பன்னீர் செல்வதை திட்டமிட்டு திரை கதை எழுதி அசிங்கபடுத்தினார்கள் என்று கூறினார். இதெல்லாம் நடக்கும் போது இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு வார்த்தை கூட வருத்தம் தெரிவிக்கவில்லை.கூசலிட்டவர்களை கண்டிக்க வில்லை..இது ஜனநாயகமா என்று கேள்வி எழுப்பினார்.

தலைமையை தொண்டர்கள் தீர்மானிக்க வேண்டும் என்பது தான் எம் ஜி ஆர் உருவாக்கிய பைலா, அதிமுகவின் உறுப்பினர்கள் பட்டியலை வெளியிடுங்கள் ஒற்றை தலைமை வேண்டுமென்றால் பெட்டி வைத்து தேர்வு செய்யுங்கள் என்று கூறினார்.

நில அபகரிப்பு நடப்பது  போல அதிமுகவில் அரசியல் அபகரிப்பு நடக்கிறது..

எம்ஜிஆரை திமுகவிலிருந்து நீக்கிய போது அமைச்சர்கள் எல்லாம் கலைஞர் பக்கம் தான் இருந்தார்கள் எம்ஜிஆர் உடன் யாரும் இல்லை தனி ஆளாக நின்று கட்சியை வளர்த்தெடுத்தார்.

நாங்கள்  தொண்டர்களை திரட்டுவோம் , தொண்டர்கள் யார் பக்கம் என்பதை காட்டுவோம் என கூறினார்.

ஏற தாள 70 வயதை தொட்டு விட்ட ஓபிஎஸ்-ம் ,இபிஎஸ்-யும் இரட்டை தலைமையே தொடர்ந்து அதிமுகவை அடுத்த தலைமுறை கையில் நல்ல முறையில் ஒப்படைக்க வேண்டும் என வேண்டுகோள் வைப்பதாக கூறினார்.

அதிமுக ஜாதி ரீதியாக பிரிக்கப்படுகிறது.  இயக்கம் பேராபத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. அன்று கூவதூறில் டெண்டர் எடுத்த எடப்பாடி பழனிச்சாமி இன்று பொது குழு உறுப்பினர்களை டெண்டர் எடுக்க நினைக்கிறார்.

இட ஒதுக்கீடு பிரச்சனையில் இபிஸ் செய்தது தவறு..

ஒபிஎஸ் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு இப்போது குடுக்க வேண்டாம் பொறுமையாக குடுபோம் என்று எவ்வளவோ கூறினார்.ஆனால் இபிஎஸ் கேட்கவில்லை.தேர்தலில் தோல்வி அடைந்தோம்.

"நமது அம்மா" நிறுவனர் எஸ்.பி.வேலுமணியின் உறவினர் சந்தர சேகரன் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக தான் நான் நாளிதழில் இருந்து விலகினேன்..

கொட நாடு கொலை விவகாரத்தில் எந்த முயற்சியும் எடப்பாடி பழனிச்சாமி ஏன் எடுக்கவில்லை ..அனைத்து அதிகாரங்களும் இருந்தும் ஒரு முயற்சி கூட எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து 5 சந்தீக மரணங்கள் நடைபெற்றது. கொடநாடு கொலை வழக்கில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஆய்வு செய்து சொல்கிறது. சேலம் இளங்கோவன் சம்மந்தப்பட்டிருக்கிறார் என்றாலும் எடப்பாடி பழனிச்சாமி அவருக்கு மாவட்ட செயலாளர் பதவியை குடுத்து இருக்கிறார்.

கொடநாடு கொலை வழக்கில் சேலம் இளங்கோவன் சம்பதபட்டிருகிரார் என்று தெரிந்தும் அவருக்கு  அன்பளிப்பாக தான் எடப்பாடி பழனிச்சாமி அவருக்கு மாவட்ட செயலாளர் பதவியை கொடுத்திருப்பார் என சந்தேகம் எழுகிறது.

கொடநாடு கொலை ,கொள்ளை வழக்கை ஒரு வாரத்தில் கண்டுபிடிப்போம் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது, விரைவாக கொடநாடு வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை அரசு கைது செய்ய வேண்டும் என மருது அழகராஜ் வேண்டுகோள் விடுத்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com