மாறுகிறது இந்திய நாட்டின் பெயர்?

மாறுகிறது இந்திய நாட்டின் பெயர்?
Published on
Updated on
1 min read

இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வரும் செப்டம்பர் 18 முதல் 22 ஆம் தேதிவரை நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்காக சட்ட மசோதா நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் விதமாக இந்த திட்டம் உள்ளதாக பல்வேறு அரசியல் கட்சிகள் இதனை எதிர்த்து வந்தனர். இந்நிலையில், மேலும் ஒரு சட்டத்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்திய நாட்டின் பெயரை பாரத் என்று மாற்ற சட்ட மசோதா அறிமுகபடுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஜி20 மாநாட்டிற்கு குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழில் பாரத் குடியரசு தலைவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சிகள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.  ஆனாலும் ஏற்கனவே இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் முதல் சரத்தில் "இந்தியா அல்லது பாரத். இது அரசுகளின் ஒன்றியம்" என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவை இந்தியா என்றும் பாரத் என்றும் அழைக்கலாம் என்பது இதன் பொருள். இந்நிலையில் பாரத் என மாற்ற உள்ள இந்த சட்ட மசோதா இந்தியாவிற்கு புதியதாக பாரத் என்ற பெயரை சூட்டப்போவதில்லை வேண்டுமென்றால் இந்தியா என்ற பெயரை நீக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com