இன்னும் சிங்கிள் தான், அவைளபிள் கூட: 4-வது திருமணத்திற்கு தயாராகும் நடிகை வனிதா!  

தனக்கு நான்காவது முறையாக திருமணம் நடைபெற்றது என்ற செய்தி தவறானது, அதை யாரும் நம்ப வேண்டாம், நான் இன்னும் சிங்கிள் தான் என நடிகை வனிதா தெரிவித்து அதிரடி கிளப்பியுள்ளார்.
இன்னும் சிங்கிள் தான், அவைளபிள் கூட: 4-வது திருமணத்திற்கு தயாராகும் நடிகை வனிதா!   
Published on
Updated on
2 min read

தனக்கு நான்காவது முறையாக திருமணம் நடைபெற்றது என்ற செய்தி தவறானது, அதை யாரும் நம்ப வேண்டாம், நான் இன்னும் சிங்கிள் தான் என நடிகை வனிதா தெரிவித்து அதிரடி கிளப்பியுள்ளார்.

தமிழகத்தில் பழம்பெரும் நடிகர்களான விஜயகுமார்-மஞ்சுளா தம்பதியினருக்கு பிறந்தவர்தான் நடிகை வனிதா விஜயகுமார். இவருக்கும் ஆகாஷ் என்பவருக்கும் கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில், இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்தார். பின்னர் ஆந்திராவை சேர்ந்த ஆனந்தராஜன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார் வனிதா. அவருடன் ஒரு பெண் குழந்தையை பெற்றார். அவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவரையும் விவாகரத்து செய்தார்.

பின்னர் யூ-டியூப் சேனலை நடத்திய வனிதா, அப்போது பழக்கமான விஷுவல் எடிட்டர் பீட்டர் பால் என்பவரை காதலித்து மூன்றாவது திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் பீட்டர் பாலின் முதல் மனைவி வனிதா மீது புகார் அளிக்க, அந்த திருமணம் பெரும் சர்ச்சையானது. இந்த திருமணமும் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. திருமணமான சில தினங்களிலேயே வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.

இந்நிலையில் தற்போது வட இந்தியாவைச் சேர்ந்த பைலட் ஒருவரை வனிதா விஜயகுமார் 4-வது முறையாக திருமணம் செய்துகொண்டதாகவும் ஆனால் திருமணம் குறித்து அவர் பொதுவெளியில் தெரிவிக்கவில்லை என்றும் சமூக வலைதளங்களில் தகவல் வைரலானது.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள அவர், தனக்கு நான்காவது முறையாக திருமணம் நடைபெற்றது என்ற செய்தி தவறானது, அதை யாரும் நம்ப வேண்டாம், நான் இன்னும் சிங்கிள் மற்றும் அவைலபிள் என நடிகை வனிதா தெரிவித்து அதிரடி கிளப்பியுள்ளார். பிறகென்ன இனி 4-வது திருமணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பதில் மாற்றமில்லை.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com