“எங்களுக்கும் அவங்களுக்கும் ரொம்ப தூரம்” - விஜயுடன் நிச்சயம் கூட்டணி இல்லை - உடைத்து பேசிய சீமான்!!

ஒரு தேர்தலை கூட அவர்கள் சந்திக்கவில்லை.ஆனால் அவர்களால் கிட்டத்தட்ட 15% ஓடுகளை பெற முடியும் என...
vijay and seeman
vijay and seeman
Published on
Updated on
1 min read

அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகள் முதற்கொண்டு லெட்டர் பேட் கட்சிகள் வரை கூட்டணி அமைத்தல், உறுப்பினர்களை சேர்த்தால் என பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்த சட்டமன்ற தேர்தல்  நாம் யாரும் இதுவரை பார்க்காத ஒரு தேர்தலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள சூழல் வரை மும்முனை போட்டிதான் உருவாகும் சூழல் நிலவுகிறது. திமுக - அதன் கூட்டணிக்கட்சிகள், அதிமுக -பாஜக கூட்டணி, தவெக, நாதக, உள்ளிட்ட கட்சிகள் ஒருபக்கம்  என இந்த தேர்தல் செல்லும் என எதிர்பார்க்கலாம். ஆனால் கடைசி நிமிஷத்தில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம்.

விஜய் -ன் அரசியல் பிரவேசம் 

விஜய் கட்சி ஆரம்பித்து ஓராண்டாகிவிட்டது. உச்சநட்சத்திரமாக இருந்த விஜய் திடீரென அரசியலில்  குதித்தார். உண்மையில் விஜய் அரசியல் பிரவேசத்தால் பல பிரதான கட்சிகள் பீதியடைந்துள்ளன. விஜய் பலம் இனமும் சோதித்துப்பார்க்கப்படவில்லை. ஒரு தேர்தலை கூட அவர்கள் சந்திக்கவில்லை.ஆனால் அவர்களால் கிட்டத்தட்ட 15% ஓடுகளை பெற முடியும் என கணித்துள்ளனர். இவர் சிதைக்கும் ஓட்டுக்களால் அதிமுக-திமுக ஆகிய இருகட்சிகளுக்கும் பிரச்னை. அதனால்தான் அதிமுக -வினர் விஜய் -ஐ தொடர்ந்து கூட்டணிக்கு அழைத்தனர். ஆனால் சமீபத்தில் நடந்த தவெக செயற்குழு மாநாட்டில் திமுக, அதிமுக, பாஜக என அணைத்து கட்சிகளையும் கிழித்து தொங்கவிட்டுவிட்டார், இனிமேல் எந்த கூட்டணியிலும் சேர முடியாது.

சீமான் சொல்வதென்ன 

நம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்த காலத்தில் தம்பி எங்களோடு இணைந்தால் நன்றாக இருக்கும் என பேசிக்கொண்டிருந்தார். ஆனால் விஜய் தனது கொள்கை வழிகாட்டியாக அறிவித்தலிலிருந்து விஜயுடன் கூட்டணி வைப்பது குறித்து சீமான் பேசவில்லை. இன்று மீண்டும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீமானிடம் தவெக நாதக கூட்டணி அமையுமா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சீமான் “அவர்களோடு பயணிப்பது மிகக்கடினம். அவர்களை பெரியாரை முன்ணனிருத்தி ஒரு அரசியல் செய்கின்றனர், அந்த அரசியலுக்கும் நமக்கு வெகுதூரம். நான் மொழி, இனம் என பேசினால் அவர் அதை பிரிவினை என்பார், அவர் எனக்கு என்றுமே போட்டியல்ல..எங்களுக்கு யாருமே போட்டியல்ல..என்றார். தொடர்ந்து  “பிரதான கட்சிகள் எல்லாம் தேர்தல் வேலையை துவங்கிவிட்டன.. நீங்கள் அமைதியாக இருக்கிறீர்களே? எனக்கேள்வி எழுப்பப்பட்டது. “நாங்கள் தொடர்ந்து தேர்தல் பணியில்தான் இருக்கிறோம். காசு கொடுத்து ஓட்டு வாங்கும் அவசிய இல்லை. எங்கள் வேட்பாளர்கள் ஏற்கனவே களத்தில் உள்ளனர். அவர்களுக்கும் எங்களுக்கும் ரொம்ப தூரம் என பேசியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com