அவசரநிலையை அமல்படுத்திய ஆளுநர்! தனியார் மயமாக்குதலில் முதலமைச்சர் வாயைமூடி மெளனம் காப்பது ஏன்?

அவசரநிலையை அமல்படுத்திய ஆளுநர்! தனியார் மயமாக்குதலில் முதலமைச்சர் வாயைமூடி மெளனம் காப்பது ஏன்?
Published on
Updated on
1 min read

புதுச்சேரியில் மின்துறை தனியார் மயமாக்கல் விவகாரத்தில் துணை நிலை ஆளுநர் அறிவிக்கப்படாத அவசர நிலையை அமல்படுத்தியுள்ளதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

6வது நாள் போராட்டம்:

புதுச்சேரியில் மின்துறையை தனியார் மயமாக்குதலுக்கு நடவடிக்கை மேற்கொண்டு வரும் மத்திய மாநில அரசுகள், அந்த முடிவை திரும்பப்பெற வேண்டி இன்று 6வது நாளாக ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தனியாருக்கு தாரை வார்க்கும் அரசு:

இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி அவரது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், புதுச்சேரியில் லாபத்தில் இயங்கி வரும் புதுச்சேரி  மின்துறையை தனியார் மயமாக்குவதன் மூலம் 20 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை தனியாருக்கு அரசு தாரைவார்க்கிறது என்று குற்றம் சாட்டினார்.

ஏழை மக்கள் பாதிக்கப்பட வாய்ப்பு:

அப்படி ஒருவேளை மின் துறை தனியார் மயமானால், மின் கட்டணத்தை தனியார் நிறுவனம் நிர்ணயிக்கும். அப்போது டெல்லி, மகாராஸ்டிராவை போல 1 யூனிட் மின்சாரம் 18 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட வாய்ப்புள்ளதால்  ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறினார்.

முதலமைச்சர் வாய்மூடி இருப்பது ஏன்:

தொடர்ந்து பேசிய அவர், மின்துறை தனியார் மயமாக்கல் விவகாரத்தில் முதலமைச்சர் ரங்கசாமி வாய்மூடி மவுனம் காப்பது ஏன் என கேள்வி எழுப்பினார். அத்துடன் மின் துறை தனியார் மயமாக்குதல் விவகாரத்தில் ராணுவத்தை இறக்கி துணைநிலை ஆளுநர் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனத்தை அமல்படுத்தி உள்ளதாக குற்றம் சாட்டினார்.

மேலும், சாதி மத பேதமின்றி செயல்படுவோம் என எடுத்த பதவிப் பிரமாணத்திற்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் பேரணியில் அமைச்சர்கள் எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டது கண்டிக்கதக்கது என்றும், இவர்கள் எல்லாம் அமைச்சர்களாக இருக்கவே தகுதி இல்லாதவர்கள் என்றும் ஆவேசம் தெரிவித்தார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com