காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்குமா மநீம கட்சி...சந்திப்பில் கமல் சொன்னது என்ன?

காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்குமா மநீம கட்சி...சந்திப்பில் கமல் சொன்னது என்ன?
Published on
Updated on
2 min read

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட உள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், மநீம கட்சி தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டுள்ளார்.

காங்கிரஸ்க்கு ஒதுக்கிய திமுக :

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவேரா அண்மையில் உயிரிழந்த நிலையில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று ட்ஏர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதியை மீண்டும் தனது கூட்டணி கட்சியான காங்கிரஸ்கே ஒதுக்கி திமுக அறிவித்தது. 

ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டி :

இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக யாரை நிறுத்துவது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் முடிவில், காங்கிரஸ் வேட்பாளாராக ஈவிகேஎஸ் இளங்கோவனே போட்டியிடுவார் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மேலிடம் அறிவித்தது.

மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த ஈவிகேஎஸ் :

இதனைத்தொடர்ந்து, சென்னை அறிவாலயம் சென்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், வேட்பாளர் அறிவிப்பதற்கு முன்பாகவே பிரச்சாரம் தொடங்கிவிட்டதாகவும், தங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தெரிவித்தார். 

கமலை சந்திக்க இருந்த ஈவிகேஎஸ் :

தொடர்ந்து பேசிய அவர், இத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து ஆதரவு கேட்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். ஏற்கனவே, ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டதால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு  மநீம கட்சி ஆதரவு அளிக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து ஆதரவு கேட்க இருப்பதாக அதிகாராப்பூர்வ தகவல் வெளியானது. இந்த பின்னணியில், மநீம கட்சி காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு (கி) தேர்தலுக்கு மட்டும் ஆதரவு அளிக்குமா? அல்லது வருகிற 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் ஆதரவு அளிக்குமா? என்ற கேள்வி அரசியல் பார்வையாளர்களிடையே பேசப்பட்டு வருகிறது.

ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் :

இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்த ஆதரவு கேட்டுள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஈவிகேஎஸ், மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ”நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுப்பதாக” தெரிவித்ததாக கூறினார். 

திருமாவளவனை சந்தித்த இளங்கோவன் :

முன்னதாக, திமுகவின் கூட்டணி கட்சியில் இருக்கும் விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு ஆதரவு அளிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு திருமாவளவனும் ஆதரவு அளிப்பதாக தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com