“பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட 12 ஆம் வகுப்பு மாணவி” - வெட்டுக்காயங்களுடன் காட்டுக்குள் கிடந்த உடல்.. தூத்துக்குடியில் பரபரப்பு!

உடலில் காயங்களுடன் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் மாணவி சடலமாக கிடந்தார்...
“பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட 12 ஆம் வகுப்பு மாணவி” - வெட்டுக்காயங்களுடன் காட்டுக்குள் கிடந்த உடல்.. தூத்துக்குடியில் பரபரப்பு!
Published on
Updated on
2 min read

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே வேடநத்தம் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் விவசாயி சுப்புராஜ். இவரது மனைவி காளீஸ்வரி இந்த தம்பதிக்கு 17 வயது மகள் இருந்த நிலையில் அவர் குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது 12ம் வகுப்பு பொது தேர்வை எழுதி வந்திருக்கின்றனர். இந்நிலையில் மார்ச் 10 ஆம் தேதி மாலை 6 மணிக்கு அவர் இயற்கை உபாதைக்காக வீட்டிலிருந்து வெளியே சென்றதாக சொல்லப்படுகிறது. வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாமல் இருந்திருக்கிறார். எனவே பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவியை தேடிய நிலையில் அவர் எங்கு தேடியும் கிடைக்காமல் இருந்திருக்கிறார்.

எனவே மாணவியின் தந்தை சுப்புராஜ் குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற நிலையில் அங்கிருந்த போலீசார் பள்ளி மாணவி என்பதால் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து சுப்புராஜ் மார்ச் 11ஆம் தேதி காலை விளாத்திகுளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனிடையே, மார்ச் 11ஆம் தேதி மாலை வேடநத்தம் காட்டுப்பகுதியில் முகம் மற்றும் உடலில் காயங்களுடன் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் மாணவி சடலமாக கிடந்தார்.

மாணவியின் சடலத்தை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாரிடம் தகவல் அளித்த நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவியின் சடலத்தை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தகவலறிந்து அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி குளத்தூர் - குறுக்குச்சாலை - சாலையில் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Admin

இதைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் மற்றும் போலீஸார் மாணவியின் பெற்றோர் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவுப்படி 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர் மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிராமத்தில் ஒவ்வொரு வீடு வீடாக சென்று விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் காவல்துறை உரிய தண்டனை வாங்கி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மேலும் நேற்று குளத்தூர் காவல்துறை காவல் நிலையம் ஆரத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த போதே காவல்துறையினர் உரிய முறையில் விசாரணை நடத்தி தேடி இருந்தால் இந்த சம்பவம் நடைபெற்றிருக்காது காவல் துறையினர் அலட்சியம் காரணமாகவே தற்போது மாணவி உயிரிழந்துள்ளதாகவும் எனவே சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவியின் உறவினர்கள் தெரிவித்தனர். குற்றவாளிகளை கைது செய்யாத வரை உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் காரணமாக வேடநத்தம் கிராமம் மட்டும் இல்லாமல் அருகே உள்ள கிராமங்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com