”உன்ன வெட்டிப்போட்டா யார் வந்து கேக்க போறாங்க” - 13 வருடம் காத்திருந்து பழி தீர்த்த பெண் வீட்டார்!

தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அவர்கள் திருவோணத்தில்
magalakshmi and kaliyamoorthy
magalakshmi and kaliyamoorthy
Published on
Updated on
1 min read

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே எட்டுபுளிக்காடு பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது 32). இவர் அதே பகுதியை சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் குடும்ப வசதியின் காரணமாக இருவரது வீட்டிலும் இவர்களின் திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

எனவே மகாலட்சுமியும் கலியமூர்த்தியும், திருவோணம் பகுதியில் 12 வருடங்களாக வசித்து வந்தனர், இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அவர்கள் திருவோணத்தில் தங்கியிருந்த வீட்டை காலி செய்ய சொன்னதால் கலியமூர்த்தியின் அம்மா மகனையும் மருமகளையும் சொந்த ஊருக்கு அழைத்து சென்றுள்ளார்.

இருவரும் சொந்த ஊருக்கு வருவதற்கு முன்னரே, மகாலட்சுமியின் உறவினர்கள் மற்றும் பெற்றோரிடம் அனுமதி பெற்று கொண்டே கலியமூர்த்தியின் அம்மா ஊருக்கு அழைத்து வந்துள்ளார்.மகாலட்சுமியின் பெற்றோர் “அவர்கள் உங்களுக்கு மட்டும் பிள்ளைகள் இல்லை எங்களுக்கும் தான் பிள்ளைகள் வரச்சொல்லுங்கள்” என ஒப்புதல் அளித்துள்ளனர்.

சொந்த ஊருக்கு வந்த தம்பதியினர் இரண்டு மாதங்களாக அமைதியான முறையில் வசித்து வந்த நிலையில், நேற்று மகாலட்சுமி தனது இரண்டு பிள்ளைகளையும் அழைத்து கொண்டு, வெளியூருக்கு சென்றுள்ளார். வீட்டில் கலியமூர்த்தி மட்டும் தனியாக  இருந்துள்ளார்.

இதை அறிந்த மகாலட்சுமியின் உறவினர்கள், 13 வருட பகையை மனதில் வைத்துக்கொண்டு நேற்று காலை(9.30 மணியளவில்) வீடு புகுந்த சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் மற்ற உறவினர்கள் கலியமூர்த்தியை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மருத்துவமனையில் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மகாலட்சுமி “நானும் எனது கணவரும் 13 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டோம்  13 வருடங்களாக திருவோணம் பகுதியில் வசித்து வந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் எங்கள் சொந்த ஊருக்கு வந்தோம். இரண்டு மாதங்கள் எல்லோரும் நல்ல படியாகத்தான் நடந்துகொண்டனர்.நேற்று நானும் எனது பிள்ளைகளும் வெளியில் சென்ற பிறகு எங்கள் வீட்டிற்கு வந்த எனது அண்ணன், தம்பி, சித்தப்பா மற்றும் தாய்மாமன் எனது கணவரை, தலையில் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

பின்னர் “உன்னை  வெட்டிப்போட்டா யார் வந்து கேக்க போறாங்க” என கூறிவிட்டு ஆற்று வாய்க்காலில் தூக்கி போட்டு சென்றிருக்கின்றனர். என் கணவரின் இந்த நிலைக்கு காரணமானவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் தான், எனக்கும் என் பிள்ளைகளுக்கும் நியாயம் வாங்கி தர வேண்டும்” என்று பேசியுள்ளார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த புதுக்கோட்டை காவல்துறையினர். தலைமறைவாக இருக்கும் மகாலட்சுமியின் உறவினர்களை  தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com