பேருந்து கவிழ்ந்து விபத்து - 15 பேர் படுகாயம்...

திருவண்ணாமலை அருகே பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 பேர் படுகாயமடைந்தனர்.
பேருந்து கவிழ்ந்து விபத்து - 15 பேர் படுகாயம்...
Published on
Updated on
1 min read

திருவண்ணாமலை | வந்தவாசி அடுத்த பிருதூர் கிராமத்தில் மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்ற தனியார் பேருந்து சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்து கொள்ளானதில் 15 பேர் படுகாயம் அடைந்து வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளுவர் மாவட்டம் திருத்தணி அருகே கீழ் நெடுங்கள் கிராமத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட மேல்மருவத்தூர் பக்தர்கள் தனியார் பேருந்தில் மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அதிகாலையில் வந்தவாசி - மேல்மருவத்தூர் சாலையில் பிருதூர் கிராமம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 15 மேல்மருவத்தூர் பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.

இதை அடுத்து தகவல் அறிந்த வந்தவாசி போலீசார் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த 15 மேல்மருவத்தூர் பக்தர்களை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நான்கு பேர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com