
டெல்லி சங்கராபுர பகுதியில் 10 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன 17 வயது சிறுமியின் உடல் ரோஹ்தக் மருத்துவமனையின் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மதம் 7 -ஆம் தேதி கோயல் என்ற சிறுமி (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது வீட்டை விட்டு 22 வயது காதலருடன் வெளியேறினார். பெற்றோர் எவ்வளவு தேடியும் மகளை கண்டுபிடிக்க முடியவில்லை. 17 வயது சிறுமி காணாமல் போனது தொடர்பாக சங்கராபுரா காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்திருந்தனர்.
இதற்கிடையில் சிறுமி கோயலும் அவரது காதலரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதனால் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். இதனால் அவரை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக சென்றுள்ளார். ஆனால் சிறுமியை மருத்துவமனை வாசலிலேயே விட்டுவிட்டு சென்றதாக தெரிகிறது.
இந்நிலையில் கோயலின் உடல் மிக பலவீனமாக இருக்கவே அவருக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்திருக்கிறது, ஆனால் சிறிது நேரம் கழித்து கோயலும் உயிரிழுந்துள்ளார்.
கோயலின் காதலரிடம் இருவரின் உடலும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.ஆனால் அந்த நபர் இறந்து பிறந்த குழந்தைக்கு மட்டும் இறுதி சடங்குகளை முடித்துவிட்டு. கோயலின் உடலை மருத்துவமனையிலே விட்டுச்சென்று தப்பிவிட்டார்.
ரோஹ்தக்மருத்துவமனை நிர்வாகம் அடையாளம் தெரியாத சிறுமியின் உடல் தங்கள் பிணவறையில் இருப்பதாக காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்திருக்கிறது. அடையாளங்களை கொண்டு இது 10 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன சிறுமி கோயல்தான் என்பதை கண்டுபிடித்த போலீசார், ஹரித்துவாரில் பதுங்கியிருந்த அந்த நபரை கைது செய்து, ஆள் கடத்தல், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் விசாரணையில் “ சிறுமியின் உடலை தகனம் செய்ய 10,000 ரூபாய் ணம் கேட்டதாகவும் , தான் ஒரு கூலித்தொழிலாளி என்பதால் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லாததால்’ சிறுமியின் உடலை மருத்துவமனையிலே போட்டுவிட்டுச்சென்றதாக கூறியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்