நள்ளிரவில் காதலனோடு இருந்த சிறுமி! 3 பேர் கொண்ட கும்பலால் சீரழிக்கப்பட்டாரா? செல்போனை பறித்து.. அந்தரங்க புகைப்படம் எடுத்து அட்டகாசம்

அந்த சிறுமி கையெடுத்து கும்பிட்டு அழுது புலம்பிய நிலையில் அந்த 3 பேர் கும்பலும் அந்த சிறுமிக்கு கூட்டு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். ஒரு கட்டத்தில் அந்த சிறுமி மயக்கம் அடைந்துள்ளார்.
Tirunelveli crime news
Tirunelveli crime news
Published on: 
Updated on: 
2 min read

நெல்லை மாநகர் பகுதியில் வசிக்கும் தம்பதியினருக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளார். அந்த சிறுமியை 3 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் தொந்தரவு செய்ததாகவும், சிறுமியின் நகைகளை பறித்து சென்றதாகவும், மேலும் அவரது அந்தரங்க புகைப்படங்களை கொண்டு மிரட்டியதாகவும் கூறப்படும் செய்தி அந்த அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த சிறுமி டவுனில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். சிறுமியின் தந்தை பங்குச்சந்தையில் தொழில் செய்து வரும் நிலையில், சிறுமியின் தாயார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அந்த சிறுமி தன்னுடன் படிக்கும் ஒரு மாணவனை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று பேட்டை மலையாள மேடு அருகே நள்ளிரவில் சிறுமி தனது காதலனுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் சேர்ந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் அந்த இடத்திற்கு வந்துள்ளனர். இதையடுத்து அந்த கும்பல் சிறுமி அவரது காதலனுடன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அந்த சிறுமியையும், அவரது காதலனை மிரட்டி தாக்கியுள்ளனர்.

பின்னர் அந்த சிறுமியை தங்களது ஆசைக்கு இணங்குமாறு அந்த கும்பல் வற்புறுத்தியுள்ளது. ஆனால் அந்த சிறுமி கையெடுத்து கும்பிட்டு அழுது புலம்பிய நிலையில் அந்த 3 பேர் கும்பலும் அந்த சிறுமிக்கு கூட்டு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். ஒரு கட்டத்தில் அந்த சிறுமி மயக்கம் அடைந்துள்ளார்.

அதைத் தொடர்ந்து அந்த கும்பல், சிறுமி அணிந்திருந்த கம்மல் மற்றும் செயினை பறித்துள்ளனர். மேலும், சிறுமியின் காதலனிடம் இருந்து செல்போனையும் அந்த கும்பல் வாங்கிக் கொண்டுள்ளது. அந்த செல்போனில் அந்த சிறுமியின் அந்தரங்க பாகங்களை புகைப்படங்கள் எடுத்து கொண்டு, இந்த சம்பவம் குறித்து வெளியே சொன்னால் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவதாகக் கூறி மிரட்டி அந்த இடத்தில் இருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சஞ்சய் சேகர் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் நெல்லை டவுண் மகளிர் போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுமிக்கு தொந்தரவு நடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவிப்பதற்கு பயந்து, உடல்நிலை சரியில்லை என்று கூறி 10 நாட்களாக பள்ளிக்குச் செல்லாமல் இருந்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

இதை எடுத்து சிறுமியிடம் ரகசியமாக போலீசார் நடத்திய விசாரணையில் மாணவியை துன்புறுத்தி நகையை பறித்துச் சென்றது டவுன் தென் பத்து பகுதியில் வசிக்கும் சுரேஷ் (27) மற்றும் அவரது கூட்டாளிகளான 17 மற்றும் 14 வயதுடைய 2 சிறுவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அதில் 14 வயது சிறுவன் மீது ஏற்கனவே கொலை வழக்கு இருந்ததாகவும் அவர், கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்ட அதிர்ச்சி தகவல்களும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து சுரேஷ் மற்றும் அந்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் சுரேஷ் மீது 3 கொலை வழக்குகள் உள்ளது. மேலும், அவர்களிடம் இருந்து நகை, செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். காவல்துறையினர் செல்போனை ஆய்வு செய்ததில் சிறுமியின் அந்தரங்க புகைப்படங்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது. அதில் சிறுமி தொடர்பான வேறு ஏதேனும் வீடியோக்கள் உள்ளதா? என அறியும் பணியில் போலீசார் தற்போது ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சிறுமியை அந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்களா? என்பதை அறிய சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது போலீசார் அந்த 3 பேர் கொண்ட கும்பலை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் விசாரணை முடிவில், அன்று நடந்த சம்பவங்கள் குறித்த உண்மைகள் தெரியவரும் என்று கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com