ட்ரையல் ரூமிற்குள்.. இழுத்துச்செல்லப்பட்ட 18 வயது இளம்பெண்! அடுத்தடுத்த நடந்த கொடூரம்.. வெளியான சிசிடிவி காட்சிகள்!

அவரது தலைமுடியைப் பிடித்து இழுத்து வலுக்கட்டாயமாக அழைத்து செல்வதும் பதிவியாகியுள்ளது
ட்ரையல் ரூமிற்குள்.. இழுத்துச்செல்லப்பட்ட 18 வயது இளம்பெண்! அடுத்தடுத்த நடந்த கொடூரம்.. வெளியான சிசிடிவி காட்சிகள்!
Published on: 
Updated on: 
1 min read

டெல்லியில் உள்ள ஒரு துணிக்கடை ஒன்றில் ட்ரையல் ரூமில் 18 வயது இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கடைக்குள் புகுந்த இளைஞர் ஒருவர், அங்கு பணிபுரிந்து வந்த 18 வயது பெண்ணைத் தாக்கி கொலை செய்த காட்சிகள் அதில் பதிவாகியுள்ளது.

டெல்லியின் மோதி நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள துணிக்கடை ஒன்றில் ஷப்னம் என்ற 18 வயது இளம்பெண் சேல்ஸ் கேர்ள்-ஆக பணியாற்றி வந்துள்ளார். மேற்கு டெல்லியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த அவர், சனிக்கிழமை வழக்கம் போல வேலைக்கு சென்றுள்ளார். ஆரஞ்சு நிற டி-ஷர்ட் அணிந்தபடி கடைக்குள் நுழைந்த சூரஜ் என்ற இளைஞர், திடீரென ஷப்னத்தை பலமாக தாக்கியுள்ளார்.

இதுதொடர்பாக வெளியான சிசிடிவி காட்சிகளில், கடையின் உள்ளே நாற்காலியில் அமர்ந்திருந்த ஷப்னத்தை அந்த நபர் தாக்குவதும், அவரது தலைமுடியைப் பிடித்து இழுத்து வலுக்கட்டாயமாக அழைத்து செல்வதும் பதிவியாகியுள்ளது. தொடர்ந்து அவரை கடையில் இல்ல ட்ரயல் ரூமுக்கு இழுத்துச் சென்றுள்ளார். அப்போது ஷப்னம் கதறி அழுதுள்ளார். பின்னர் அந்த அறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் அந்த பெண் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இந்தக் கொலை சம்பவம் சனிக்கிழமை மாலை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், இரவு சுமார் 9 மணியளவில்தான் கடை ஊழியர்களுக்கு இதுகுறித்து தெரியவந்துள்ளது. கடையை மூடுவதற்குத் தயாரான ஊழியர்கள், ட்ரையல் அறைகளைச் சோதனை செய்தபோது ஷப்னம் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதற்கிடையே, சம்பவத்திற்குப் பிறகு டெல்லியில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற சூரஜை காவல்துறையினர் கைது செய்தனர். ஷப்னத்திற்கும் சூரஜுக்கும் ஏற்கெனவே பழக்கம் இருந்ததாகவும், பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனால், தனிப்பட்ட காதல் பிரச்சினைகள் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ஷப்னத்தின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், கொலை நடந்த நேரம், சம்பவத்தின் பின்னணி மற்றும் குற்றத்தில் தொடர்புடைய பிற விவரங்களைக் கண்டறிய கடையில் பதிவான சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள துணிக்கடைக்குள் புகுந்து இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.