தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து..! 5 -பேர் பலி!!

அருகாமையில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ...
tenkasi tragedy
tenkasi tragedy
Published on
Updated on
1 min read

தென்காசி, தூத்துக்குடி பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.  இந்த நிலையில், இடைகால் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி 3 -பெண்கள் 2 ஆண்கள் என  5 -பேர் பலியாகி உள்ளனர். பல பயணிகள் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.   

 எம்.ஆர்.கோபாலன் என்கின்ற தனியார் பேருந்தும், கே.எஸ்.ஆர் என்கின்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில், பேருந்தில் இருந்த ஏராளமான பயணிகள் காயம் அடைந்ததாக கூறப்படும் நிலையில், சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.

மேலும், அருகாமையில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வரும் நிலையில், அவர்களுக்கு தென்காசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இன்று அம்மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் நல்வாய்ப்பாக குழந்தைகள் யாரும் அந்த பேருந்துகளில் பயணிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com